பல் விழுந்து முளைக்கும் வரைக்கும் தான், நாம் பற்சுகாதாரம் பற்றி அதிகம் கவலைப்படாமல் சுற்றித் திரிவோம். ஆனால் அந்தக் கட்டத்தை தாண்டியதும், இருப்பதை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியே அதிகம் கவலைப்படுவோம். அப்போது தான், முன்னாடியே கொஞ்சம் அக்கறை எடுத்திருக்கலாமோ என்று யோசிப்போம். உங்கள் வாய் சுகாதாரம், உங்கள் ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல, உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும்.
வயது வந்த ஆண்கள் வாய் சுகாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உதவிக் குறிப்பிகளை நாம் இந்தப் பதிவில் பார்ப்போம். அத்துடன், எவ்வாறானவற்றை நாம் நமது அன்றாட வாழ்வில் இருந்து தவிர்ப்பதன் மூலம் அதிக காலத்திற்கு நமது பற்களை பாதுகாக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பதின்ம வயதில் இருந்தே கிராமப்புறங்களில் வாழும் ஆண்களிடம் வெற்றிலை பாக்கும் போடும் பழக்கம் ஒட்டி விடுகிறது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் சுண்ணாம்பும், புகையிலையும் பயன்படுத்தப்படும் போது வாய் சுகாதாரமானது வெகுவாகப் பாதிக்கப்படும்.
தற்காலத்தில் இளைஞர்களிடம் சுவையூட்டப்பட்ட பாக்கு, மெல்லக் கூடிய புகையிலை கலவை(குட்கா/Gutka, Pan Parag, Chewable Tobacco and Betel Leaf) போன்றவை பாவிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆசைக்கு ஒருவாட்டி என்று ஆரம்பித்து பிற்காலத்தில் பீடி, சுருட்டு, சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது வழமையாகும். புகைக்கும் போது, உங்கள் உதடுகளில் வெப்பத்தை உணர்ந்தால், உடனே சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளவும். இல்லாவிட்டால், உதடுகள் கருமையாக அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் புகைப்பதன் காரணமாகவும் பற்களில் காவி படியலாம். அவை, அவற்றின் இயற்கையான நிறத்தை இழக்கலாம். கறை நல்லது தான் ஆனால் பற்களில் ஏற்படும் கறையை Surf Excel போட்டு நீக்க முடியாது. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை, பான்பராக், பீடா மெல்லும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு Recover(அவற்றை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வருதல்) செய்ய முடியாத அளவுக்கு வாய்ச் சுகாதாரம் வெகுவாகப் பாதிப்படையும்.
காலையிலும், தூங்குவதற்கு முன்னும் பல் துலக்க வேண்டும். அதன் போது சிறிதளவு Tooth Paste எடுத்துக் கொண்டால் போதும். வாய் சுகாதாரத்தைப் பேன, பற்களை துலக்கினால் மாத்திரம் போதாது, நாக்கில் படிந்துள்ள வெள்ளை நிற பசையையும் Tongue Cleaner பயன்படுத்தி வழிக்க வேண்டும், அல்லது Tooth Brush யைப் பயன்படுத்தி கூட வட்டமாக, மெதுவாக தேய்து நாக்கில் இருந்து வெள்ளைப் பசையை நீக்கலாம்.
உங்களுக்கு வாயில் துர்நாற்றம் வீசுவது போல் தெரிந்தால், அவசியம் அதற்காக காரணத்தை கண்டறியவும். வெறுமனே Mouth Wash பாவித்தால், அதனை தற்காலிகமாகவே சரி செய்ய முடியும்.
சூத்தை ஏற்பட்ட பற்களை(Tooth Decay) பல் மருத்துவரிடம் காண்பித்து சரி செய்யவும். அதன் மூலம் அதன் ஆயுளை நீடிக்கலாம். பல் வரிசையில் ஏற்படும் ஒழுங்கீனத்தையும் பல் மருத்துவரிடம் காண்பித்து சரி செய்யலாம்.
முன் பின் பழக்கமில்லாத, நம்பிக்கை இல்லாத Strangers களுடன் வாய்வழிப் பாலுறவு(Oral Sex - Sucking Penis, Licking Vagina, etc.) மேற்கொள்ளும் முன்னரும், வாய்வழிப் பாலுறவு மேற்கொண்ட பின்னரும் பல் துலக்க வேண்டாம்.
பல் துலக்கினால், ஈறுகளில்(Gums) ஏற்படும் காயங்கள் காரணமாக பால்வினை நோய் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தேவை என்றால், உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.
எல்லோருக்கும் எல்லா Toothpaste களும் ஒத்து வராது. ஆகவே பலவற்றை பயன்படுத்திப் பார்த்து, உங்களுக்கு சரியானதை தெரிவு செய்யவும். நீங்கள் பயன்படுத்தும் Toothpaste இல் உப்பு இல்லாவிட்டாலும் Fluoride இருக்க வேண்டும். அவையே பற்களில் ஏற்படும் சிறிய துவாரங்களை நிரப்பும். Mouthwash உடன் சேர்ந்த Toothpaste களும் சிறந்த தெரிவு இல்லை.
அதிகம் செறிவு கூடிய இரசாயணங்கள் அடங்கிய Toothpaste களை பாவிப்பதை தவிர்க்கவும். அவற்றால் கூட பல் ஈறுகள் கரையலாம். பற்களை விட, பல் ஈறுகளை பாதுகாப்பதே அவசியம்.
உங்களுக்கு உதடுகள் அடிக்கடி காய்ந்து கொண்டிருந்தால், Lip Balm, Lip Moisturizer & Lip Care Products பயன்படுத்தலாம்.
அடிக்கடி Toothpaste களை மாற்றும் போதும், சில உணவு ஒவ்வாமைகளாலும், வாயினுள் சூட்டுக் கொப்பளங்கள் ஏற்படும். அவ்விடங்களில் நல்லெண்ணெய் பூசுவதன் மூலம், சீக்கிரம் சரி செய்ய முடியும்.
வாயினுள் தோன்றும் கொப்பளங்கள், பருக்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தவும். Pan Parag, Pan Parag Pan Masala, Gutkha, Flavored Tobacco போன்றவற்றால் புற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
Keywords: வாய் சுகாதாரம், பல் சுகாதாரம், Everything You Need to Know About Dental and Oral Health
Comments
Post a Comment