உடல் கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் நமது உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். குறைந்தது ஆண்கள் பூப்படைந்த பிறகாவது தமது உடல் சுத்தத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், அதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகளையும் வியர்வையால் ஏற்பட்ட துர்வாடையையும் நீக்க முடியும். அதே நேரம் உடலில் மயிர் வளர்ச்சி அதிகமாக இடங்களை நன்கு Soap போட்டு, கைகளால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். விரும்பினால், அளவுக்கதிகமாக வளர்ந்திருக்கும் அந்தரங்க முடிகளை Trim செய்யலாம். பூப்படைந்த நாள் முதல் ஆண்களின் உடலில் அதிகம் வியர்வை தோன்றும். வியர்வையில் நனைந்த உள்ளாடைகளை(ஜட்டி, பனியன், காலுறை) துவைக்காமல் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். குளித்து விட்டு, மீண்டும் ஏற்கனவே அணிந்த துவைக்காத உடைகளை விரும்பினால்(தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில்) அணியலாம். ஆனால் உள்ளாடைகளை(Inner wear) மீண்டும் துவைக்காமல் அணிவதை தவிர்க்க வேண்டும். காலையில் குளித்து விட்டு அணிந்த ஜட்டி, பனியனை இரவு தூங்கும் முன்னர் கழட்டுவதே சிறந்தது. அதே நாளிலேயே அணிந்த ஜட்டி, பனியனை கழட்டி மீண்டும் அணிவது சிறந்த ...
a dedicated desi lifestyle blog for Tamil men. Though we discuss men fashion related topics in this blog, We mainly focus on men lifestyle and their problems. Learn to wear lungi, and sarong in Tamil. Learn about the lifestyle of men who wear lungi and sarong in their day to day life. We do discuss from male puberty to men sex health from the perspective of desi men. We explore everything every tamil men should know to improve their desi Lifestyle.