பொதுவாக ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கவே பழக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே ஆண்களுக்கான கழிவறைகளில்(Public Toilets/Rest Rooms) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க Urinals(யூரினல்/யூரினல்ஸ்) எனும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் இன்னொரு காரணமும் உள்ளது, சில ஆண்களுக்கு வெட்ட வெளியில் சுதந்திரமாக சுவாசித்துக் கொண்டே, நின்று கொண்டு ஒன்னுக்குப் போக பிடிக்கும். அடைபட்ட அறையினுள்(Toilets) சிறுநீர் கழிப்பது அவர்களுக்கு அசெளகரியமாக இருக்கும். அவர்களுக்கும் Urinals உதவியாக இருக்கும்.
சில ஆண்களுக்கு Urinals பொதுக்கழிப்பறைகளில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் உயரம் பத்தாது இருக்கலாம். அவர்களுக்காகவே தற்போது பல்வேறு உயரங்களில் Urinals அமைக்கப்படுகின்றன. ஆண்கள் சிறுநீர் கழித்த பின்னர், Urinals இல் இருக்கும் Flush யை அழுத்த மறக்கக் கூடாது.
சில இடங்களில் இருக்கும் Urinals இல், ஒரு ஆணின் ஆண்குறியை இன்னொரு ஆண் பார்த்து விடாத படி சிறிய மறைப்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அநேகமாக இடங்களில் அவ்வாறான மறைப்புகள் இருப்பதில்லை. அதுவே ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில் Urinals யைப் பயன்படுத்த தயங்குவதற்குக் காரணமாகும்.
உதாரணமாக, ஆண்களுக்கான Rest Room இல் வரிசையாக 5 Urinals(A, B, C, D, E) இருந்தால் அவற்றில் மூன்றை(A, C, E) மாத்திரமே பயன்படுத்துவர். அதாவது ஒரு ஆண், ஒரு Urinal யைப் பயன்படுத்தி ஒன்னுக்குப் போகும் போது, அவனுக்கு அருகில் இருக்கும் Urinal யை இன்னொரு ஆண் பயன்படுத்த மாட்டான். அப்படிப் பயன்படுத்தினால் அவருக்கு தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளது என்பார்கள். அவசரத்திற்கு அதனை பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், வலது/இடது புறம் பார்க்காமல் சுவற்றைப் பார்த்துக் கொண்டோ அல்லது மேலே அண்ணார்ந்து பார்த்துக் கொண்டோ ஆண்கள் ஒன்னுக்குப் போவார்கள்.
சில ஆண்களுக்கு தமது ஆண்குறியை இன்னொருவர் பார்க்கும் போது அல்லது தாம் சிறுநீர் கழிப்பதை இன்னொருவர் பார்ப்பது பிடிக்காது. அந்த நிலையில் அவர்களுக்கு சிறுநீர் கூட வெளியேறாது. அவ்வாறானவர்கள் Urinals யைப் பயன்படுத்துவதை விட Toilets யை பயன்படுத்துவது உகந்தது.
Recommended: வயது வந்த ஆண்கள் எப்படி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது?
Comments
Post a Comment