MeToo என்பது சமூகத்திலும், வேலைத்தளங்களிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வெளிக்கொணர்வுகளுக்கான ஒரு இயக்கமாகும்.
மிடூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 இல் "Me Too" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
2017 இல் நடிகை அலிஸ்சா மிலனோ முதன்முதலில் டுவிட்டரில் #MeToo Hashtag குறியிட்டு, நடிகர் ஹார்வி வெனிங்ஸ்டனால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் அனைத்து சமூகவலைத்தளங்களிலும், குறிப்பாக Twitter/X தளம் மூலம் பலர் தமக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வந்தனர்.
ஆனால் பெண்களுக்கு மாத்திரம் தான் இவ்வாறான பாலியல் தொந்தரவுகள் நடக்குமா என்றால், இல்லை என்பதே உண்மையாகும். பெண்களைப் போன்றே பல ஆண்களும் தினம் தினம் பாலியல் தொந்தரவுகளை கடந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக #MenToo இயக்கம் உருவாக்கப்பட்டாலும், அது பெரியளவில் பேசுபொருளாகவில்லை.
பெண்களைப் போன்று ஆண்கள் மத்தியில் #MenTo பிரபல்யமடையவில்லை. அதற்குக் காரணம், ஆண்கள் அந்த துன்புறுத்தல்களை ரசித்தமையா? அது கடவுளுக்குத் தான் வெளிச்சம். "ஆம்பளப் பிள்ளைனா அழக்கூடாது" என்பார்கள்.
இது போன்ற சமூகத்தில் உள்ள தரங்கெட்ட சிந்தனைகளால் கூட ஆண்கள் தமக்கு நடக்கும் அநீதிகளைப் பற்றி வெளிப்படையாக பேச முன்பவருவதில்லை.
Thanuja Singam(@ThanujaSingam) எனும் திருநங்கை, மொடலிங்க் துறையில் ஆண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய நேர்காணல்களில் கூறப்படும் விடையங்கள் தொடர்பில் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார். அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் Instagram இல் அவுத்துப் போட்டு ஆடும் பல ஆண்களுக்கு செருப்படி கொடுத்தது போன்று இருந்தது. ஆனால் அவர் ஆண்களையும் துப்பட்டா போடச் சொன்னது எங்களை சிந்திக்க வைத்தது.
உண்மையில் Sexual Abuse இக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ அல்லது மாற்று பாலினத்தவரோ அணியும் ஆடைக்கும் சம்பந்தம் உள்ளதா?
ஒரு ஆணின் மீது ஆசை ஏற்பட்டால் அவன் எவ்வளவு தான் இழுத்துப் போர்த்தி கொண்டு இருந்தாலும், காமுகர்கள் அவுத்துப்பார்க்காமல் விடமாட்டார்கள். அவர்கள் அணியும் ஆடைக்கும் Sexual Abuse இக்கும் எந்தவித நேரடி சம்பந்தமும் இல்லை என்பது எமது கருத்து. நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கள் கருத்தை Comment பண்ணுங்க.
Read More: வயது வந்த ஆண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எப்படி கடந்து செல்லலாம்?
Comments
Post a Comment