உடல் கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் நமது உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். குறைந்தது ஆண்கள் பூப்படைந்த பிறகாவது தமது உடல் சுத்தத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்.
தினமும் குளிக்க வேண்டும், அதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகளையும் வியர்வையால் ஏற்பட்ட துர்வாடையையும் நீக்க முடியும். அதே நேரம் உடலில் மயிர் வளர்ச்சி அதிகமாக இடங்களை நன்கு Soap போட்டு, கைகளால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். விரும்பினால், அளவுக்கதிகமாக வளர்ந்திருக்கும் அந்தரங்க முடிகளை Trim செய்யலாம்.
வியர்வையில் நனைந்த உள்ளாடைகளை(ஜட்டி, பனியன், காலுறை) துவைக்காமல் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். குளித்து விட்டு, மீண்டும் ஏற்கனவே அணிந்த துவைக்காத உடைகளை விரும்பினால்(தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில்) அணியலாம். ஆனால் உள்ளாடைகளை(Inner wear) மீண்டும் துவைக்காமல் அணிவதை தவிர்க்க வேண்டும். காலையில் குளித்து விட்டு அணிந்த ஜட்டி, பனியனை இரவு தூங்கும் முன்னர் கழட்டுவதே சிறந்தது. அதே நாளிலேயே அணிந்த ஜட்டி, பனியனை கழட்டி மீண்டும் அணிவது சிறந்த சுகாதார பழக்கம் இல்லை.
ஆண்கள் குளித்த பின்னர் உடலை நன்கு உலர்த்தி விட்டு Deodorant பயன்படுத்த வேண்டும். அதன் மூலம், உங்களுக்கு வியர்த்தாலும் அதில் துர்வாடை இருக்காது.
மூக்குச் சளி, சளி, எச்சில் போன்றவற்றை நீரில் அலசியும் அகற்றலாம். உங்களிடம் உள்ள Tissue Paper யைப் பயன்படுத்தியும் அகற்றலாம். ஆனால் உங்கள் Kerchief யை அதற்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் Kerchief யை இருமல், தும்மலின் போது, பொது இடங்களில் வாய்/கைகள்/முகம் துடைக்கும் போது பயன்படுத்தலாம்.
ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின்னர், ஆண்குறியை உதறாமல், அதனை சுய இன்பம் செய்வது போல உருவி கடைசி சொட்டு சிறுநீரையும் வெளியேற்ற முயற்சிக்கவும்.
அதன் பின்னர், சில ஆண்கள் தம்மிடம் உள்ள கைக்குட்டையின்(Kerchief) ஒரு பக்க முனையால் ஆண்குறியின் மொட்டை துடைப்பர். சில ஆண்கள் தம்மிடம் உள்ள Tissue Paper இனால் ஆண்குறியின் மொட்டை துடைப்பர். சில ஆண்கள் ஆண்குறியின் மொட்டை நீரினால் கழுவுவர். எல்லா கழிவறைகளிலும் ஆண்குறியை அலசக் கூடிய வசதி இருக்கும் என்று சொல்ல முடியாது.
எதுவாக இருந்தாலும், ஆண்குறியின் மொட்டை உலர்த்திய பின்னரே மீண்டும் அதனை ஆண்குறியின் முன்தோலால் மூடவும்.
சில Western Toilets இல் Bidet Spray இல்லாவிட்டால், மலம் கழித்த பின்னர் அங்கு உள்ள Tissue Paper இனால் ஒன்றுக்கு பல முறை துடைத்து சுத்தம் செய்யலாம். உங்களுக்கு Tissue Paper பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் Wet Wipes for Men/Mens Wipes/DUDE Wipes - Flushable Wipes பயன்படுத்தலாம். இவை தற்போது எல்லா Supermarkets களிலும் கிடைக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்த முன்னர் உலர்வான Toilet Paper இனால் ஆசனவாயை சுத்தம் செய்திருந்தால் நல்லது.
குந்தியிருந்து போகும் Squat Toilets உள்ள டாய்லெட்டுகளில்(Lavatory) பக்கெட்/வாளி வைத்து குண்டி கழுவும் போது ஆடைகள் நனையாது அவதானமாக கழுவ வேண்டும். ஆசனவாயையும், ஆண்குறியையும் இடது கையால் சுத்தம் செய்யவே நமது மதங்கள் பரிந்துரைக்கின்றன.
Western Toilets யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது அதன் இருக்கையில், அல்லது ஓரத்தில் படும் வகையில் சிறுநீர் கழிக்கக் கூடாது. பொதுவாக Western Toilets யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சிறந்தது.
ஆண்கள் விந்து வெளியேற்றிய பின்னர், ஆண்குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விந்து பட்ட இடங்களை நன்கு நீரில் அலச வேண்டும். முடிந்தால், சவர்காரம்(Soap) போட்டும் கழுவலாம். பிறகு, நன்றாக நீர் அருந்தி சிறுநீர் கழிக்க வேண்டும். அதன் மூலம் சிறுநீர் குழாயினுள் தேங்கி நிற்கும் விந்துக்களும் வெளியேறும்.
உங்கள் ஆடைகளில், உள்ளாடைகளில் Wet Spots உருவானால்(விந்து, சிறுநீர் போன்றவை பட்டு) அவற்றை அன்றன்றே துவைத்துக் காயப் போடவும். தூக்கத்தில் விந்து வெளியேறினால், காலையில் எழுந்து தலையில் குளித்து விட்டு, அணிந்திருந்த விந்துக் கறை படிந்திருக்கும் ஆடைகளை துவைத்துக் காயப் போட வேண்டும்.
கால், கைகளில் வளர்ந்திருக்கும் நகங்களை அடிக்கடி வெட்டி, சுத்தம் செய்வதன் மூலம் அவற்றினுள் அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம்.
Keywords: Stool, Poop, Faeces, What are men body wastes?
Comments
Post a Comment