இஸ்லாத்தின் நம்பிக்கையின் மிகப்பெரிய இரண்டாவது தூணாக முஸ்லிம்களின் ஐந்து நேர தொழுகையானது(Salah) பார்க்கப்படுகிறது. தொழுகை(Salah), அரபுகளில்லாத முசுலிம்களால் நமாஸ் (Namaz) எனவும் அழைக்கப்படுகிறது.
தொழுகையானது ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் அனுசரிக்கப்படுகிறது. மக்காவில் உள்ள கஃபாவை நோக்கி வழிபடும் போது, முசுலிம்கள் முதலில் நின்று, பின்னர் மண்டியிட்டு அல்லது தரையில் உட்கார்ந்து, குர்ஆனிலிருந்து பாராயணம் செய்து, கடவுளை வணங்குகிறார்கள்.
தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் அது மாத்திரம் போதாது, தொழுகை செய்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.
தொழுகைகளுக்கு முன்னர், தமது உடலை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சுத்தம் செய்யும் சடங்கை அவசியம் முறையாக செய்ய வேண்டும். அதனை உளூ/உளு/வுழு(Wudu) என அழைப்பர்.
முஸ்லிம் ஆண்கள் உளூ செய்வது எப்படி?
Step 1 – Make your intention to perform wudu
நீங்கள் தொழுகைக்காக தயார் ஆகப் போகுறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Step 2 – Say Bismillah
இந்த செய்கையை கடவுளுக்கு(Bismillah (In the Name of Allah)) அர்பணியுங்கள்.
Step 3 – Wash Your Hands Three Times
மூன்று முறை கைகளை கழுவ வேண்டும். இதன் போது Prophet Muhammad வழிகாட்டுதலின் படி, வலது கையை சுத்தம் செய்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கை விரல்களின் நுனியில் இருந்து மணிக்கட்டு வரை மூன்று முறை நன்றாக நீரில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதே முறையில் இடது கையையும் சுத்தம் செய்யவும்.
Step 4 – Rinse Your Mouth Three Times
வலது கையால் நீரை எடுத்து வாயினுள் விட்டு, நன்றாக வாயை சுத்தம் செய்யவும். இதனையும் மூன்று முறை செய்யவும்.
Step 5 – Sniff Water Into Your Nostrils Three Times
வலது கையில் நீரை எடுத்து, மூக்கினை அருகில் வைத்தை, அந்த நீரை மூக்கினுல் உறிஞ்சி எடுத்து(snort or inhale the water), சீறி வெளியேற்ற(blow it out) வேண்டும். இதனையும் மூன்று முறை செய்ய வேண்டும்.
Step 6 – Wash Your Face Three Times
முகத்தை நன்கு நீரில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். வலது காதில் இருந்து இடது காது வரையும், நெற்றியில் இருந்து கீழ் தாடை வரையும் ஒரு இடம் விடாமல் நீரில் நனைத்து மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். தாடி/மீசை வளர்த்திருக்கும் ஆண்கள், கைகளை நனைத்து, அவற்றை விரல்களால் தடவி, வாறினால் போதும்.
Step 7 – Wash Your Arms Three Times
கை விரல்களின் நுனியில் ஆரம்பித்து, முழங்கைகள் வரை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். முதலில் வலது கையையும், பிறகு இடது கையையும் சுத்தம் செய்ய வேண்டும்.
Step 8 – Wipe Your Head Once
உங்கள் தலைமுடியை ஈரமான கைகளால் துடைக்கவும்/தடவவும். அதாவது உங்கள் நெற்றியில் இருந்து முன் கழுத்து வரை ஈரமான கைகளால் அழுத்தி துடைக்கவும்(Wipe). இதனை ஒரு முறை மாத்திரம் செய்ய வேண்டும். இதன் போது உங்கள் தலைமுடியின் அளவு, தன்மை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. தலைமுடியை நனைத்து கழுவக்(Wash) கூடாது.
Step 9 – Clean Your Ears Once
இதனை படிமுறை 8 பயன்படுத்திய நீரினைக் கொண்டே செய்ய வேண்டும். அதாவது புதிகாக நீரினை கையில் நனைக்கத் தேவையில்லை. தலையை துடைத்த கைகளாலேயே, உங்கள் ஈரமான கைகளால் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி(Index Fingers) காதின் உள்புறத்தையும், பெருவிரலைப் பயன்படுத்தில்(Thumbs Fingers) காதின் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனையும் ஒரு தடவை தான் செய்ய வேண்டும்.
Step 10 – Wash Your Feet Three Times
கைகளைக் கழுவியது போன்றே கால்களையும் நன்றாக நீரில் கழுவ வேண்டும்.
Step 11 – Recite the Shahada and the Dua
Step 10 – Wash Your Feet Three Times
கைகளைக் கழுவியது போன்றே கால்களையும் நன்றாக நீரில் கழுவ வேண்டும். அதாவது கால் விரல்களின் நுனி, விரல்களுக்கு இடையினான பகுதி, குதிக்கால், என கால் விரல்களின் இருந்து கணுக்கால்கள் வரை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
Step 11 – Recite the Shahada and the Dua
பின்னர் முகம்மது நபிகளைப் போன்று கலிமா ஓத வேண்டும்.
“Ash-hadu an la ilaha illal lahu wa ash-hadu anna Muhammadan ‘abduhu wa rasuluh.”
"லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்"
இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..
இத்துடன் வுழு முடிவடைகிறது. அதன் பின்னர் அவர்கள் தொழுகையில் ஈடுபட இறைவனால் அனுமதிக்கப்பட்டவர்களாகிறார்கள்.
Note: தொழுகையில் ஈடுபடும் போதோ அல்லது உளூ செய்து கொண்டிருக்கும் போதோ முஸ்லிம் ஆண்களின் உடலில் இருந்து வாயு(குசு) வெளியேறினாலும், சிறுநீர் வெளியேறினாலும், மலம் வெளியேறினாலும் அவசியம் மீண்டும் உளூ/வுழு செய்ய வேண்டும். ஆனால் அது சில மருத்துவக் காரணங்களால், அல்லது உடல் பிரச்சனைகளால் நிகழ்ந்தால், அதற்கு விதிவிலக்கு உண்டு.உங்களுக்குத் தெரியுமா? மூன்று முறை என்பது இஸ்லாத்தின் பல்வேறு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. முத்தலாக் (Triple Talaq) என்பது இந்திய, இஸ்லாமிய ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும். மூன்று முறை தலாக் எனும் சொல்லை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும், பேசு பொருளாகவும் இந்தியாவில் உள்ளது.
அதே போன்று முஸ்லிம் ஆண்கள் குளிக்கும் போதும் மூன்று முறை தலையை நனைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொழுகையில் ஈடுபட முன்னர் முஸ்லிம் ஆண்கள் எப்படி குளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?
தொழுகையில் ஈடுபடுவதற்கு உளூ/வுழு செய்தாலே போதும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் உளூ மாத்திரம் செய்தால் போதாது, அவசியம் குளிக்க வேண்டும். தொழுகையில் ஈடுபடுவத்ற்கு முன்னர் குளிப்பதை Ghusl என்பர்.
இதனை முழு உடலையும் தூய்மைப்படுத்தும் செயலாக கருதுவர். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை உடலில் நனையாத பகுதியே இருக்கக் கூடாது.
யாரெல்லாம் இதனை செய்ய வேண்டும்? செக்ஸ் செய்து அல்லது சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய ஆண்கள் அல்லது உடலுறவு கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லும் போது, இஸ்லாமிய விடுமுறைகளின் போது சிறப்பு தொழுகைக்காக செல்பவர்கள், ஹஜ் கடமைக்காக இஹ்றாம் செய்ய ஆரம்பிக்க முன்னர், சுய நினைவை இழந்திருந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் முதல் முறை தொழும் போது, அவசியம் Ghusl(கடமையான குளிப்பு) செய்ய வேண்டும்.
குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:
விந்து வெளிப்படல்:
“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)
இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)
உடலுறவு கொள்ளல்:
உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)
ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)
முஸ்லிம் ஆண்கள் குளிக்கும் முறை(Ghusl)
கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும் போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)
நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)
நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உடலுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)
எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)
முஸ்லிம் ஆண்கள் எப்போது கடமையான குளிப்பை(Ghusl) செய்ய வேண்டிய தேவையில்லை?
ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போது, ஆண்குறியில் இருந்து Precum வெளியேறிய போதும் கடமையான குளிப்பை செய்யத் தேவையில்லை. ஆண்குறியை சுத்தம் செய்து விட்டு, Precum படிந்த ஆடைகளை மாற்றி, வுழூ செய்தால் போதும்.
Precum(Mazi in Arabic) என்பது ஆண்களுக்கு உடலில் காம இச்சை அதிகரிக்கும் போது, இறுக்கமான புணர்புழைகளை(யோனி, ஆசனவாய்) காணும் போது, கலவியில் ஈடுபட தயாராக உதவியாக, ஆண்குறியில் இருந்து வெளியேறு நிறமற்ற, பிசின் போன்ற இயற்கையான உராய்வு நீக்கி திரமமாகும். நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது "வழியிது துடைச்சுக்கோ" என்பார்கள். அந்த வழியிது, உண்மையில் இது தான்.
இவ்வளவு தூரம் சுத்தத்தை கவனிக்கும் முஸ்லிம் ஆண்கள் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை கழுவி சுத்தம் செய்ய அவ்வளவு நேரம் எடுக்காது. பின்னர் எதற்காக முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்கிறார்கள்? (Read More)
சுய இன்பம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பினும், சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றியிருந்தால் அவசியம் கடமை குளிப்பு செய்ய வேண்டும். சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றாவிட்டால், கடமை குளிப்பு செய்யத் தேவையில்லை.
அதே போல தூக்கத்தில் விந்து வெளியேறினால், முஸ்லிம் ஆண்கள் அவசியம் கடமை குளிப்பு செய்ய வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தினர் கடைப்பிடிக்கும் சில விஷயங்களை நம்மாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற முடியும். அதில் இந்த சுத்தம் என்பது பிரதானமானதாகும்.
Recommended: இஸ்லாம் சிறப்பிக்க மறந்த தன்னினச்சேர்க்கை
Comments
Post a Comment