ஒரு ஆண் அணியும் ஆடை அவன் தோற்றத்தை அழகாக்குவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது. நமது பாரம்பரிய ஆடையான வேட்டிக்கு அடுத்ததாக, ஒரு ஆணுக்கு மரியாதையான, ஆனால் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கிடைப்பதற்கு அவர்கள் Formal Dress or Office Wear ஆடைகளைத் தெரிவு செய்து அணிகிறார்கள்.
Formal Dress or Office Wear ஆடைகளாக Dress Pant, Dress Shirt என்பன பார்க்கப்படுகின்றன. மேலேத்தேய நாடுகளில் Coat, Sweater போன்றனவும் இவற்றுள் உள்ளடங்கும்.
தற்காலத்தில் ஆண்கள் உடலுடன் ஒட்டியது போன்ற Perfect Fitting சட்டைகளையும், பேண்டுகளையும் அணிவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். முன்னாடியும் பின்னாடியும் எல்லாம் முட்டிக் கொண்டு இருக்கும் அளவுக்கு Dress Shirt, Dress Pant இறுக்கமாக இருக்கும்.
இவ்வளவு இறுக்கமாக Pant அணிந்து எப்படி இவர்களால் இயல்பாக தமது அன்றாட கடைமைகளை செய்ய முடிகிறது? எப்படி இவர்களால் உட்கார முடிகிறது? போன்ற பல கேள்விகள் உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம்.
நீங்கள் சாதாரண, ஒரு டெய்லரிடம் சென்று Cotton துணியில் அளவெடுத்து இறுக்கமாக Pant தைத்து, அல்லது Ready Made ஆக தனி Cotton துணியில் இறுக்கமான Pant வாங்கி அணியும் போது, சில நாட்களிலேயே அவற்றின் தையல் விடுபட்டு விடும்.
இறுக்கமான Cotton Dress Pant களை அணிந்து உட்காரும் போது அதன் தையல் பிரிந்து விட அதிக வாய்ப்பு இருக்கும்.
ஆனால் இவர்களால் மாத்திரம் எப்படி அந்தக் கவலையே இல்லாமல் இறுக்கமான Dress Pant களை அணிய முடிகிறது?
அதற்குக் காரணம், அவர்கள் அந்த Dress Pant யைத் தைத்திருக்கும் Fabric ஆகும். அவர்கள் Lycra Fabric வகை துணியில் இறுக்கமான Dress Pant யைத் தைத்திருந்தால் அல்லது Ready Made ஆக வாங்கியிருந்தால் அல்லது Polyester, Viscose, Elastane போன்ற Fabric வகைகளின் கலப்பில்(Blend) உருவான துணியில் இறுக்கமான Dress Pant தைத்திருந்தால், அல்லது Ready Made ஆக வாங்கியிருந்தால் அவை இழுபடக் கூடியதாக இருக்கும்.
இந்த வகை துணிகளில் இறுக்கமாக Dress Pant தைத்து அணியும் போது, Dress Pant உடலுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் குனியும் போதும் நிமிரும் போதும் அதன் துணியானது இலாஸ்டிக் போன்று ஈயும்.
அதன் காரணமாக Cotton துணியில் தைத்த இறுக்கமான Dress Pant இல் காணப்படும் பிரச்சனைகள் எதுவும் இவற்றில் இருக்காது.
இந்த வகை துணிகளில் இறுக்கமாக Dress Pant தைப்பதற்கு உடல் அளவுகளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலை வைத்து இறுக்கமாக அளவெடுத்தால், அந்த Dress Pant உங்களுக்கு மிகச்சிறப்பாக பொருந்தும்.
இடுப்பு அளவு(Waist Size) எடுக்கும் போது ஒரு விரலை வைத்து அளவு எடுக்கவும். Inseam Length எடுக்கும் போது Underwear Bulge இல் இருந்து கணுக்கால் வரை எடுக்கவும். தொடைகளும் குண்டிகளும் சந்திக்கும் இடத்தில் வைத்து தொடை அளவுகளை இறுக்கமாக எடுக்கவும். அப்போது தான் உங்கள் குண்டிகளும், தொடைகளும் தனித் தனியாக Highlight ஆகும்.
போதுமா? போதுமா? என்று உங்கள் டெய்லர் உங்களிடம் கேட்கும் போது உண்மையைச் சொல்லவும். வெட்கப்பட வேண்டாம். எல்லோரும் ஆடைகளை தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டவே அணிகிறார்கள்.
வாயால் குறிப்பிட்டு சொல்ல கூச்சமாக உணந்தால், கைகளால் காட்டி சொல்லலாம். அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
Tips: Tight Dress Pant யை Polyester, Viscose, Elastane போன்ற Fabric வகைகளின் கலப்பில்(Blend) உருவான துணியில் தைக்க, டெய்லரிடம் அளவெடுக்கச் செல்லும் போது அவசியம் Low Rise Briefs or Perfect Fitting Underwear அணிந்து செல்லவும். இதன் மூலம் Crotch Length அளக்கும் போது, அதன் அளவை தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம்.
Tips: இறுக்கமான பேண்ட் ஆணிந்திருக்கும் போது ஆண்கள் தளர்வான ஜட்டி அணியக் கூடாது.
Comments
Post a Comment