வயதாகும் போது நமது உடலில் அதிக மாற்றங்கள் நிகழும். பதின்ம வயதில் இருந்த உங்கள் தோற்றம் படிப்படியாக மாறி, வளர வேண்டியது எல்லாம் வளர்ந்து, பழுக்க வேண்டியது எல்லாம் நன்றாக பழுத்து பாக்குறவங்க எல்லாம் கொத்திக் கொண்டு போகும் அழகான, கவர்ச்சியான இளைஞர்களாக உருமாறுவீர்கள். ஆனால் அவ்வாறு நிகழும் போது நீங்கள் எதிர்பார்க்காத, விரும்பாத ஒன்று உங்கள் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் கருமை நிறமாற்றம். இது ஒரே இரவில் நடந்து விடாது. படிப்படியாக நடக்கும்.
இதனை Hyperpigmentation என்று அழைப்பர். ஆனால் சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகள், ஒவ்வாமை போன்றவற்றாலும் கூட அந்தரங்கப் பகுதிகள் தற்காலிகமாக கருமை நிறமடையும். அப்பிரச்சனைகளின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் அவர்களின் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் கருமை நிற மாற்றத்தை சரி செய்யலாம்.
ஆனால் எல்லா ஆண்களுக்கும் பொதுவாகவே இவ்வாறு அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிற மாற்றம் ஏற்படும். குறைந்தது ஆண்குறி, விதைப்பை, ஆசனவாய் போன்றவையாவது ஏனைய உடல் பாகங்களை விட கருமை நிறமாக இருக்கும். இது இயல்பான ஒன்று. உங்கள் தோலின் நிறம் வெள்ளையாக இருந்தால் உங்கள் அந்தரங்கப் பகுதியும் அதே நிறத்தில் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது.
இந்த நிறமாற்றத்தினால் உங்கள் அந்தரங்கப் பகுதியையும் நீங்கள் வெறுக்கக் கூடாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் அனுபவிக்கப் போகும் பல சுகமான அனுபவங்களுக்கு அது தான் உங்களுக்கு கை கொடுக்கப் போகிறது. அதன் மீது அன்பு மாத்திரம் செலுத்துங்கள். உங்கள் வெறுப்பை அதன் மீது காட்டாதீர்கள்.
வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்யை சூடாக்கி, ஆற வைத்து, உடல் முழுதும் தேய்த்து, ஊற வைத்து, தாங்கக் கூடிய இளஞ்சூடான வெந்நீரில் ஒரு எண்ணெய்க் குளியல் போட்டு வர, வயதாகும் போது உங்கள் உடலில் அங்காங்கே ஏற்படும் அநேகமான சரும பிரச்சனைகள் தானாக சரியாகும்.
எவ்வாறான காரணிகளால் அந்தரங்கப் பகுதியில் அளவுக்கு அதிகமான கருமை நிறம் ஏற்படும்?
1. சில ஹோர்மோன் பிரச்சனைகளாலும் தோல் கருமை நிறமடையலாம். நமது தோலில் காணப்படும் சில மனித செல்களில் Melanocytes காணப்படும். அவை Melanin(மெலனின்) யை உருவாக்கும்.
நமது தோலில் உற்பத்தியாகும் மெலனினே தோலின் நிறத்திற்கு காரணமாகும். நமது அந்தரங்கப் பகுதிகளில் காணப்படும் Melanocytes சில ஹோர்மோன்களால், ஹோர்மோன் மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும். அதன் தாக்கத்தின் வெளிப்பாடாக அவ்விடங்கள் அதிகம் கருமை நிறமாகும். இந்த மாற்றத்தை பூப்படையும் போது, கர்ப்பகாலத்தில், வயதாகும் போது நீங்கள் அதிகம் அவதானிக்கக் கூடியாக இருக்கும்.
2. அதிகம் இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகள் அணிவதனாலும் அந்தரங்கப் பகுதிகளில் உராய்வு, அழற்சிகள் ஏற்படலாம். அவற்றின் தாக்கத்தினாலும் அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிறம் ஏற்படலாம்.
3. அந்தரங்க முடிகளை அடிக்கடி முழுமையாக மழிப்பதனாலும் அதாவது Hair Removal, like Waxing or Shaving போன்றவற்றாலும் அந்தரங்கப் பகுதிகளில் அழற்சிகள் எற்பட்டு அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிறம் ஏற்படலாம்.
4. நீங்கள் உங்கள் ஆடைகளுக்கும் உள்ளாடைகளுக்கும் பயன்படுத்தும் சலவைத் தூள்(Washing Powder/Detergent), உடலுக்குப் போடும் Soap போன்றவற்றினாலும் அழற்சிகள் எற்பட்டு அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிறம் ஏற்படலாம்.
5. உணவு ஒவ்வாமைகள், சருமப் பிரச்சனைகளினாலும் அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிறம் ஏற்படலாம். அவற்றை சரி செய்வதன் மூலம், அந்தரங்கப் பகுதிகள் மேலும் கருமை நிறம் அடைவதைத் தடுக்கலாம்.
Jock Itch பிரச்சனை, அதாவது அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு பிரச்சனை உள்ள ஆண்களுக்கும் அந்தரங்கப் பகுதிகளில், குறிப்பாக தொடை இடுக்கு, தொடைகளில் கருமை நிறம் ஏற்படலாம். இந்தப் பிரச்சனையை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்வது நல்லது.
அந்தரங்கப் பகுதிகளில் கருமை நிறம் ஏற்படுவது போன்று அக்குள் பகுதிகளிலும், கழுத்தின் பின் பகுதியிலும் கருமை நிறம் ஏற்படலாம். அக்குள் பகுதிகளில் ஏற்படும் கருமை நிறத்தை சில வேளைகளில் Deodorant பாவிப்பதன் மூலம் சரி செய்யலாம்.
Comments
Post a Comment