ஆண்களைப் பொறுத்தவரை அக்குள் முடியானது அவர்களின் கவர்ச்சியான அடையாளமாகும். ஆனால் அவை அங்கு காடு போல வளர்ந்திருப்பது எல்லா ஆண்களுக்கும் பிடிக்காது. அதற்காக அக்குள் முடியை Full Shave செய்வது நல்லதல்ல. விரும்பினால், கத்தரிக் கோலால் வெட்டலாம், அல்லது Trimmer பாவித்து அழகாக Trim செய்யலாம்.
ஆண்கள் குளிக்கும் போது அக்குள் பகுதிக்கு நன்கு Soap போட்டு சுத்தம் செய்து கழுவ வேண்டும். அதே நேரம் குளித்து முடிய, அவ்விடத்தில் உள்ள ஈரத்தை நன்கு உலர்த்திய பின்னர் Deodorant பாவிக்க வேண்டும்.
ஆண்களுக்கான் ஆனது Roll On, Stick or Spray form வகைகளில் சந்தைப்படுத்தப்படுகிறது. அவற்றில் Roll On வகை Deodorant யை அக்குள் பகுதியில் நேரடியாக தடவ வேண்டும். ஆகையால் நண்பர்களுடைய Roll On வகை Deodorant களை நீங்களும் பாவிப்பது நல்லதல்ல.
Deodorant ஆனது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது கிருமித் தொற்றுக்குள்ளாகி துர்வாடையாக மாறுவதை தவிர்க்க உதவுகிறது.
Deodorant இல் ஒரு வகையான Antiperspirants, வியர்வைத் துவாரங்களை அடைத்து உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துகிறது. ஆனால் அவ்வாறு வியர்வை வெளியேறுவதை அதிக நேரம் கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே காலையில் Antiperspirants பயன்படுத்தினால், மாலையில் வீடு திரும்பியதும் உடலை நன்கு சுத்தம் செய்து குளிக்கவும். அதிகம் நீர் அருந்தி, Antiperspirants பயன்படுத்தியமையால் வியர்வை மூலம் வெளியேறாத கழிவுகளை/Toxins, சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றவும்.
நீங்கள் தினமும் வெள்ளை நிற சட்டை அணிபவராக இருந்தால் கை வைத்த பனியன் அணிந்து சட்டையை அணிவதன் மூலம் உங்கள் அக்குள் பகுதிகளில் மஞ்சள் நிற கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
Comments
Post a Comment