ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி விளம்பரங்கள் பயமுறுத்துவது போல வேட்டி கட்டுவது ஒன்றும் கடினமான விடையம் கிடையாது. பொதுவாக வேட்டியில் நான்கு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி என இருவகைகள் உள்ளன.
ஆனால் அவற்றை விட நீளமான வேட்டிகளும் விசேட தேவைகளின் போது அணிவதற்காக உள்ளது. ஆனால் அன்றாட வாழ்வில் ஆண்கள் வழமையாக அணிவது நான்கு முழ வேட்டி, மற்றும் எட்டு முழ வேட்டிகளாகும்.
வேட்டிகளின் நான்கு முழ வேட்டிகளை விட எட்டு முழ வேட்டிகளையே வயது வந்த ஆண்கள் அணிய வேண்டும்.
அதன் மூலம் நான்கு முழ வேட்டி அணிந்திருக்கும் போது ஆண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உதாரணமாக: வேட்டி விலகி தொடை தெரிவது, சம்மாளம் கோலி இருக்கம் போது வேட்டி விலகி அந்தரங்கம் வெளித்தெரிவது.
சில ஆண்கள் எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டியாக அணிவர். ஆனால் அது தவறாகும். எட்டு முழ வேட்டியை ஆண்கள் எட்டு முழ வேட்டியாகவே அணிய வேண்டும்.
தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள் எட்டு முழ வேட்டியை விட நான்கு முழ வேட்டியையே அதிகம் விரும்பி அணிவர்.
வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டியை அணிவதன் மூலம் நடக்கும் போதும், உட்காரும் போதும் தமது மயிர் படந்த தொடைகளை அவர்களால் இலகுவாக வெளிக்காட்டக் கூடியதாக இருக்கும். விரும்பினால், கால்களை அகட்டி வைத்து Underwear Bulge யைக் கூட வெளித்தெரியச் செய்யலாம்.
எட்டு முழ வேட்டியை நாம் காட்டித்தருவது போன்று எட்டு முழ வேட்டியாகவே அணியும் போது, அதற்கு Support ஆக, இடைச்சொருகலில் இருந்து வேட்டியின் கட்டு முறுசுழலன்று(தொய்வடைந்து) அவிழாது இருப்பதற்கு Belt அணிய வேண்டிய அவசியம் இருக்காது.
Tips: இந்து கோயில்களினுள் நுழையும் போது ஆண்கள் மேலாடையை கழட்டி, வெறும் மேலுடன் நுழைய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது, கழட்டியை சட்டை பின் புறம் இருக்கும் வகையில் சட்டையின் கைகளை வேட்டியின் கட்டின் மேல் கட்டலாம். நீங்கள் அணிந்திருந்தது, T-Shirt ஆக இருப்பின், அதனை இடுப்பில் கட்டாமல் இடுப்பை சுற்றி பின்பக்கமாக Tuck In செய்யலாம்.
மேலாடை இன்றி ஆலயங்களில் தரினம் செய்யும் போது கூச்சத்தின் காரணமாக அல்லது தனது உடம்பை வேறு யாரும் பார்க்கக் கூடாது(Modesty) என்பதற்காக சில ஆண்கள், அவர்களின் நெஞ்சை மறைக்கும் வகையில் வேட்டியுடன் வரும் சால்வையை போர்வை போல போர்த்திக் கொள்வதும் உண்டு.
சட்டையை, அல்லது வேட்டியுடன் வந்த சால்வையை தோளின் மீது போட்டுக் கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபடுவது அசெளகரியமாக இருக்கும்.
ஆண்கள் வேட்டி அணியும் போது உள்ளே Shorts, Pant அணிந்து வேட்டி கட்டாமல், ஜட்டி அணிந்து மாத்திரமே வேட்டி கட்ட வேண்டும். வேட்டி அவிழ்ந்து ஜட்டியுடன் நிற்பதை விட வேட்டி அவிழ்ந்து Shorts, Pant உடன் நிற்பது ஆண்களை பொறுத்தவரையில் மானக்கேடான விடையமாகும்.
ஆண்மையுள்ள ஆண்கள் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை Velcro வேட்டிகளை அணிந்து தமது தன்னம்பிக்கையை கேள்விக் குறியாக்கமாட்டார்கள்.
Tips: நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாருக்காவது லுங்கி/வேட்டி கட்ட பழக்குவதாக இருந்தால் அவர்களை Shorts/Pant அணிந்து நிற்கச் சொல்லி, அதன் மேல் வேட்டி/லுங்கி கட்டிப் பழக்கலாம். ஆனால் உங்களை அவர்களுக்கு வேட்டி/லுங்கி/சாரம் கட்டி விடச் சொன்னால், அவர்களை ஜட்டி மாத்திரம் அணிந்து நிற்கச் சொல்லலாம். அதன் மூலம் வேட்டி/லுங்கி கட்டிய பின்னர் உள்ளே அணிந்திருக்கும் Shorts/Pant யை கழட்ட வேண்டிய தேவை இருக்காது. அவ்வாறு கழட்டும் போது வேட்டி/லுங்கியின் கட்டு தளர்வடைய வாய்ப்பு உள்ளது. முறையான பயிற்சிகள் இல்லாமல் முதல் முறை லுங்கி/வேட்டி கட்டுபவர்கள் அவசியம் Belt அணியவும்.
வட இந்திய ஆண்கள் போல Dhoti(தோதி) கட்ட தெரியாத ஆண்களுக்கு உதவியாக Pant போல தைத்தை Dhoti Pant களும் சந்தையில் விற்பனையாகிறது.
தற்காலத்தில் பல்வேறு வர்ணங்களில், அலங்கார வேலைப்பாடுகளுடன், பல்வேறு அளவுகளில் கரை வைத்த வேட்டிகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை அனைத்தும் எல்லாம் ஆண்களுக்கும் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் எப்போதும் Plain Color or Silk(பட்டு) கரை வைத்த வேட்டிகள் ஆண்களுக்கு எடுப்பாக இருக்கும்.
Recommended: ஆண்கள் வேட்டி கட்டுவது தொடர்பாக பல விடையங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(Complete Guide).
Comments
Post a Comment