அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றுவது என்பது முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு விளக்கேற்றுவது என்பது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். பெண்களால் செய்ய இயலாத பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் விளக்கு ஏற்றலாம். அவ்வாறு ஆண்கள் விளக்கேற்றும் பொழுது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விதிமுறைகள் என்ன என்று தான் இந்த பாரம்பரிய கலாச்சாரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அப்படி ஆண்கள் விளக்கேற்றும் பொழுது கடவுளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் அதே சமயம் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கும் செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம். முதலில் ஆண்கள் குளிக்காமல் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
குளித்து முடித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் ஈரத் துணியுடன் விளக்கேற்ற கூடாது. தலை ஈரமாக இருக்கும் பொழுது விளக்கேற்ற கூடாது. தலையை நன்றாக துடைத்து காய வைத்த பிறகு தான் விளக்கேற்ற வேண்டும்.
வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்த பின்னரோ அல்லது செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னரோ, அல்லது தூக்கத்தில் விந்து வெளியேறியிருந்தாலோ தலைக்குக் குளிக்காமல் விளக்கேற்றக் கூடாது.
மேலும் மேல் சட்டை அல்லது உள் பனியன் இவற்றை அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வெறும் உடம்பில் தான் விளக்கேற்ற வேண்டும். அதே போல் கைலி/லுங்கி அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வேஷ்டி அல்லது துண்டு(வேட்டியின் சால்வை அல்லது வேட்டியின் மேல் அணியக் கூடிய துண்டு) இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டிக்கொண்டு தான் விளக்கேற்ற வேண்டும். வெறும் நெற்றியுடன் விளக்கேற்றக்கூடாது. நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
Recommended: வேட்டிக்கு இணையாக தற்காலத்தில் Modern Clothes களை அணிந்தும் ஆண்கள் விளக்கேற்றலாம். ஆனால் கேரளா போன்ற இடங்களில் இன்னமும் ஆண்கள் அன்றாடம் வேட்டி, லுங்கி கட்டும் பழக்கம் ஏனைய மாநிலங்கள், நாடுகளை விட அதிகமாக உள்ளது. அது வரவேற்க வேண்டிய விடையமாகும்.
அவ்வாறு நெற்றியில் திருநீறு குங்குமம் வைக்கும் பொழுது தங்களுடைய நெஞ்சுக்குழி பகுதியிலும் திருநீரை வைத்துக்கொண்டு விளக்கேற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதங்களும் பொதுவாக ஆண்களையும் பெண்களையும் மறைவான இடத்தில் குளிக்கும் போது கூட ஒரு துண்டையாவது, மானத்தை மறைக்கும் வகையில் அணிந்திருக்க பரிந்துரைக்கின்றன.
ஆண்களின் மானமானது தொடைகளுக்கு நடுவே, அடிவயிற்றுக்குக் கீழே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை ஒரு துண்டினைப் பயன்படுத்தி, அல்லது ஜட்டி அணிந்து மறைத்துக் கொண்டு குளிப்பது உகந்தது.
ஆண்கள் குளிக்கும் போது Bathing Towel யை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிப்பர். Bathing Towel இல்லாவிட்டால், வேட்டியுடன் வரும் சால்வையை/துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்க பயன்படுத்துவர்.
ஆண்கள் ஏன் மேலாடை இன்றி விளக்கேற்ற வேண்டும்? அல்லது மேலாடை இன்றி கோயிலுக்குள் நுழைய வேண்டும்?
கடவுளைக் கும்பிடும் போது உருவாகும் Positive Energy தமது உடலினுள் ஈர்த்துக் கொள்வதற்காக ஆண்களை அவ்வாறு மேலாடை இன்றி கடவுள் வழிபாடுகளை மேற்கொள்ள பெரியவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு ஆண்களின் உடம்பில், குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் இருக்கும் உரோமங்கள்(நெஞ்சு முடி) அதிகம் உதவும்.
பெண்களுக்கும் இது பொருந்தாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆண்களின் நெஞ்சு முடி/உடலில் உள்ள முடிகள் போன்று, பெண்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் அவர்களுக்கு Positive Energy யை ஈர்த்துக் கொள்ள உதவும். அதே நேரம் பெண்களுக்கு அவர்களது உடம்பில் ஆண்களைப் போல முடி வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஆண்களும் தான் நகைகள் அணிகிறார்கள் என்று நீங்கள் நினைப்பது எமக்கு புரிகிறது. ஆனால் பெண்கள் அளவுக்கு அதிகமாக இல்லை, இல்லையா? ஆனால் ஒன்றை நினைவு கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் பெண்களும் ஆண்களைப் போல மேலாடை இன்றி, ஜாக்கெட் கூட போடாமல் தான் இருந்தார்கள். சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஆண்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம், நாகரீக வளர்ச்சி அவர்களை மேலுடலை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியது.
சில இல்லங்களில் பெண்கள் விளக்கேற்றிய தீபத்தை, பின்னர் ஆண்கள் அணைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. அதேபோல் ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் அணைக்க கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபம் அதுவாக அணைவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஏதாவது மந்திரத்தை உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் குலதெய்வத்தின் பெயரையோ அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். யாரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டோ அல்லது எரிச்சலுடனோ விளக்கேற்ற கூடாது. இந்த முறையில் ஆண்கள் விளக்கேற்றும் பொழுது அவர்கள் வேண்டுதல் நிறைவேறும். கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
Comments
Post a Comment