ஆண்கள் நிர்வாணமாகவோ அல்லது Bathing Towel கட்டிக் கொண்டோ அல்லது ஜட்டியுடனோ அல்லது Shorts அணிந்தோ குளித்த பின்னர், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உடலில் உள்ள ஈரத்தைத் துடைக்கும் ஒரு துண்டு/துவாயைப் பயன்படுத்தி துடைப்பர்.
துண்டினால் உடலை துடைத்து உடலில் உள்ள ஈரத்தை அகற்றும் போது, ஆண்கள் தமது உடலில் உள்ள அதிகம் முடி வளர்ந்த இடங்களான அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, கைகள், தொடைகள், குண்டி மற்றும் குண்டிப் பிளவு, அடிவயிறு, தொடைகளுக்கு நடுவே என அனைத்து இடங்களையும் நன்றாக உலரும் வகையில் துடைத்து ஈரத்தை உலர்த்தவும்.
அதன் பின்னர் தலை முடியை நன்கு துடைத்து விட்டு, துண்டில் உள்ள ஈரத்தை பிழிந்து விட்டு, அந்த துண்டை இடுப்பைச் சுற்றி கட்டுவர். அவ்வாறு கட்டிய துண்டுடன், உடல் நன்றாக உலரும் வரை தமது ஏனைய அன்றாட வேலைகளை செய்வர்.
ஏன் ஆண்கள் உடலில் உள்ள ஈரத்தை நன்றாக உலர்த்த வேண்டும்? உடலில் உள்ள ஈரத்தை ஒழுங்காக அகற்றாமல் ஆடைகளையும் உள்ளாடைகளையும் ஆண்கள் அணிந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
ஈரமான இடங்களில் பங்கசு கிருமிகள் இலகுவில் பரவலடையும். அதிலும் குறிப்பாக அரிப்பை ஏற்படுத்தும் பங்கசு கிருமிகளுக்கு உடலில் உள்ள ஈரமான பிரதேசங்கள், அவை மேலும் பரவலடைவதற்கு உதவும்.
Comments
Post a Comment