தாடி, மீசையைப் பராமரிப்பதில் முதன்மையானது அவற்றில் படியும் அழுக்குகளையும் தூசிகளையும் கழுவி அகற்றுவதாகும். அதற்கு ஆண்கள் காலையும், மாலையும் அதே நேரம் தாடி/மீசை அரிக்கும் போதெல்லாம் அவற்றை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அரிக்கிறது என்பதற்காக அதனை சொரிந்து கொண்டு இருக்கக் கூடாது.
ஈரமான தாடி, மீசையை துண்டினால் அல்லது Tissue இனால் அழுத்தித் துடைக்கக் கூடாது. அவ்விடங்களில் ஒத்தடம் கொடுப்பது போல ஒத்தி ஈரத்தை அகற்ற வேண்டும்.
தரமான Beard Oil பயன்படுத்துவதன் மூலம் தாடி, மீசையை பளபளப்பாக்கலாம், அதே நேரம் அவ்விடங்களை உலர்ந்து போகாமல் ஈரலிப்பாக வைத்திருக்கலாம்.
தலை முடி சீவும் போதெல்லாம், அல்லது வெளியில் போகும் போதெல்லாம், தலை முடி சீவுவது போல தாடி மீசையையும் சீப்பால் சீவவும். அதன் மூலம் அவை நேர்த்தியாக நேராக வளர ஆரம்பிக்கும்.
தாடி, மீசையில் நரை ஏற்பட்டால் அவற்றை பிடுங்கலாம். ஆனால் நரை முடி அதிகமாக இருந்தால், தலைக்கு Hair Coloring செய்வது போல தாடி, மீசைக்கும் Beard Dye பயன்படுத்தவும்.
ஆனால் தயவு செய்து தலை முடிக்கும் பயன்படுத்து ஹேர் கலரை தாடி, மீசைக்குப் பயன்படுத்த வேண்டாம். சரும அலர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தலைமுடிக்கு பயன்படுத்தும் Hair Dye யை தாடி, மீசைக்கு பயன்படுத்தக் கூடாது. தற்காலத்தில் உடலில் உள்ள அனைத்து முடிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய Hair Dye கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
விழாக்கள், திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளுக்குப் போகும் போது மீண்டும் Hair Dye பயன்படுத்தாமல், வெளித்தெரியும் நரை/வெள்ளை முடிகளை சரி செய்ய Quick Touch Up Hair Color Stick யை பயன்படுத்தலாம். தாடி, மீசைக்கு நிறச்சாயம் பூச விரும்பாத ஆண்கள், விழாவிற்கு போகும் போது அவற்றில் உள்ள வெள்ளை முடிகளை மறைக்க Beard Dye Stick - Beard and Mustache Touch-up Stick பயன்படுத்தலாம். அவற்றை அதன் மீது பூசினால் போதும். அவை Instant Waterproof Beard Dye Stick களாகும். ஆகவே அவற்றை அகற்ற Shampoo பயன்படுத்தி தலையை கழுவ வேண்டும்.
அடர்த்தியில்லாமல் வளரும் தாடி, மீசைய அடத்தியாக வெளிக்காட்ட Mascara பயன்படுத்தலாம். அதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட Beard Filler Pen களும் சந்தையில் உள்ளன.
தலையில் பொடுகு ஏற்படுவதைப் போல தாடி, மீசை போன்ற உடலில் முடி வளரும் பகுதிகளிலும் சில உணவு ஒவ்வாமைகளின் காரணமாக பொடுகு போன்ற நிலைமைகள் ஏற்படலாம். அவ்வுணவுகளை தவிர்ப்பதன் மூலம் அவை மீண்டும் மீண்டும் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.
தினமும் தாடி, மீசையை கத்தரிக்கோல் அல்லது Trimmer பாவித்து Trim செய்து அவற்றை நேர்த்தியாக வளர்க்க வேண்டும்.
Read More: ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?
Keywords: Muslim Men, Beard Styles, Beard and Mustache Maintenance like Muslims, ஆண்களுக்கான தாடி, மீசை பராமரிப்பு
Comments
Post a Comment