ஆண்களின் உடலை விட்டு வெளியேறிய விந்தானது 15 to 30 minutes மாத்திரமே உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் 60 நிமிடங்களுக்குள் அதனை பெண்குறியினுள் செலுத்தினால், அந்த பெண் கர்ப்பமாக சில வாய்ப்புகள் உள்ளன.
ஆண்கள் விந்தானது பெண்குறியினுள் வெளியேற்றப்பட்டிருந்தால் அல்லது புணரும் போது கருப்பை வாயினுள் சென்ற விந்தானது சில நாட்களுக்கு(சில மணி நேரங்கள் முதல் ஐந்து நாட்களுக்கு மேற்படாமல்) உயிர்ப்புடன் இருக்கும்.
விந்துப்பாய்மத்தினுள்(Seminal Fluid) விந்தானது 24 - 36 மணித்தியாலங்களுக்கு உயிர்வாழும். அவை உயிர்வாழ தேவையான பொருட்கள் அந்த விந்துப்பாய்மத்தில் இருக்கும். அறை வெப்பநிலையை நிலையை விட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் போது அவை நீர்த்துப் போக எடுக்கும் காலம் அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிக்கும் போது, வெளியேறிய விந்தானது சீக்கிரம் நீர்த்துப் போகும். வெளியேறிய விந்தானது அறை வெப்பநிலையில் இருக்கும் போது, கூடியது 5 மணித்தியாலங்களுக்குள் அதில் உள்ள அனைத்து விந்துக்களும் இறந்து விடும்.
ஆனால் ஆய்வுகூட வசதிகளின் கீழ், விந்தினை முறையாக உறைய வைத்தால்(Freeze) எவ்வளவு காலமும் வைத்திருக்க முடியும். 40 வருடங்களுக்கு முன்னர் Fertility Centre இல் உள்ள Cryo-Tanks களில்(Cryopreservation) உறைய வைத்த(-196 degrees celcius) விந்து மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவில் ஒரு ஆண் விரும்பினால், 55 வருடங்களுக்கு அவர்களது விந்தினை உறைய வைத்திருக்க முடியும்.
Dry Ice இன் உதவியுடன், வெளியேறிய விந்தினை ஆண்கள் 3 நாட்களுக்கு உறைய வைத்திருக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் தனது காதலியைப் பிரிந்து இருக்கும் ஆண்கள் பிளாஸ்டிக் போத்தல்களில் அடிச்சு ஊத்தி, விந்தினை சேகரித்து வைத்திருப்பது போன்ற Memes களை நீங்கள் அவதானித்திருக்கலாம். அது உண்மையல்ல. ஆண்களால் அவ்வாறு போத்தல்களில் விந்தினை சேகரித்து வைக்க முடியாது. அப்படியே சேகரித்தாலும், அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது.
அதே போன்று Don't Breathe(2016) எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் ஒரு ஆண், தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் தனது விந்தினை Turkey Baster எனும் சமையல் உபகரணத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணின் பெண்குறியினுள் செலுத்த முற்படுவது போன்று காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறி ஒரு பெண்குறியினுள் ஆணின் விந்தினை செலுத்த முடிந்தாலும், வீட்டில் சேமித்து வைத்த விந்தானது உயிர்ப்புடன் இருக்காது.
Comments
Post a Comment