பொதுவாக சந்தையில் விற்கும் ஆண்களுக்கான ஆணுறைகள் Latex எனும் இறப்பரால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அது இயற்கையான இறப்பரில் இருந்து மாத்திரம் செய்யப்படுவதில்லை. அவை செயற்கையாகவும் செய்யப்படுகின்றன. அதனை Synthetic Latex என்பர். அது எதுவாக இருப்பினும் சிலருக்கு இவ்வாறான இறப்பர் பொருட்களை அணியும் போது அணிந்த இடங்களில் ஒவ்வாமை ஏற்படும்.
நீங்கள் Latex Condom அணிந்திருக்கும் போது, அதிலும் குறிப்பாக Flavored Condom களை அணியும் போது உங்களுக்கு ஆண்குறியில் அரிப்பு ஏற்பட்டால், ஆண்குறியில் எரிச்சல் ஏற்பட்டால், ஆண்குறி வீங்கினால் அதிகமாக சிவத்தால், உடனே காண்டத்தை கழட்டி, ஆண்குறியை நீரில் அலசவும். தேவை ஏற்படின், அலர்ஜி அதிகமாக இருந்தால், வைத்தியரை நாடவும்.
லேடெக்ஸ் அலர்ஜி இருக்கும் ஆண்களால் ஆணுறை அணிய முடியாதா? அப்படி இல்லை. அவர்களுக்கு என்று பிரத்தியேகமான ஆணுறைகள்(Polyisoprene Condom/பொலிஐசோபிரின் காண்டம்) உள்ளன. ஆனால் அவற்றில் உள்ள பிரச்சனை, அவை Latex Condom போல நீடித்து உழைக்காது. சீக்கிரம் கிழிந்து விடும். அதற்குக் காரணம் அவை மிகவும் மெல்லியதாக(Skin Feel) இருப்பதாகும். ஆகவே ஆசனவாய் வழிப் புணர்ச்சிக்கு அது உகந்தது அல்ல.
உங்களுக்கு Latex Allergy இருக்கிறதா என்பதை ஒரு Latex ஆணுறை அணிந்து பார்த்தால் தான் தெரியும். அதற்காக திருமணம் ஆகும் வரை, அல்லது கலவியில் ஈடுபட சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருக்க வேண்டாம்.
உங்கள் ஆண்குறியில் Latex Allergy ஏற்படால் அது சரியாக சில நாட்கள் கூட ஆகலாம். ஆகவே முன்னரே முயற்சித்து தயாராக இருப்பது நல்லது.
Recommended: ஆண்கள் காண்டம் வாங்குவது பற்றியும், ஆண்கள் காண்டம் அணிவது பற்றியும் மேலும் பல விடையங்களை ஆழமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: லேடெக்ஸ் ஆணுறை, காண்டம், Condom, Male Condom, Skin Allergy, How to do the condom allergy test?
Comments
Post a Comment