ஹேர் ஸ்டைலிங் என்பது ஆண்களின் தோற்றத்தை நொடிப்பொழுதில் மாற்றக் கூடிய மாயாஜால வித்தையாகும். ஆனால் உங்கள் முகத்தின் வடிவத்திற்கு ஏற்ற Hairstyle யை நீங்கள் தெரிவு செய்யாவிட்டால், அல்லது நீங்கள் அணுகிய Barber கத்துக் குட்டியாக இருந்தால், உங்களால் நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைப் பெற முடியாது.
அதே நேரம் ஆண்கள் தேவையைப் பொறுத்தே தமக்கான Hairstyle யைத் தெரிவு செய்ய வேண்டும். அதாவது, அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தால், அது கல்யாணம், பிறந்த நாள் என எதுவாகவும் இருக்கலாம்.
அந்த நாளுக்கு மாத்திரம் உங்களுக்கு தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய Special Hairstyle யை நிகழ்ச்சியின் அன்று காலையிலோ அல்லது, மூன்றூ நாட்களுக்கு முன்னரோ செய்து கொள்ளலாம்.
Recommended: ஆண்கள் தமது சிகை அலங்காரத்தை முகத்தின் வடிவத்தை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஆண்களின் முகத்தின் வடிவத்தை எப்படி கண்டறிவது?
அது என்ன Special Hairstyle? அது வேறு ஒன்றும் இல்லை. வீட்டிலேயே உங்களால் தலை சீவி, உங்களுக்கு நீங்களே வழமை போல சிகை அலங்காரம் செய்து கொள்வது சாதாரண Hairstyle ஆகும். ஆனால் ஒரு Barber இன் உதவியுடன், முடி திருத்துவதும் மாத்திரம் அல்லாது வித்தியாசமான Hairstyle யை செய்து கொள்வது Special Hairstyle ஆகும்.
பிரச்சனை என்னவென்றால், Special Hairstyle யை உங்களால் நீண்ட நாட்களுக்கு மீண்டும் அந்த Barber இன் கை படாமல், தனியாக Maintain செய்ய முடியாது. Barber உங்கள் நண்பனாக இருந்தால் பரவாயில்லை. இல்லாவிட்டால் இரண்டு நாளுக்கு ஒரு தடவையாவது சலூன் பக்கம் போய் வர வேண்டும்.
அதே நேரம் Special Hairstyle செய்யும் போது பயன்படுத்தும் Hairstyling Products இற்கு தனியாக செலவு செய்ய வேண்டி ஏற்படும். அதன் காரணமாகவே அ நேகமான ஆண்கள் ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமாக இருந்தால், அந்த நாள் வரை தலைமுடியை புது Special Hairstyle யை செய்வதற்காக வளர்ப்பார்கள். மற்றுபடி, வழமையான Hairstyle யை மேற்கொள்ளும் வகையிலேயே முடியைத் திருத்துவார்கள்.
Special Hairstyle செய்யும் போது அதற்கு ஏற்றாற் போல தாடி, மீசையையும் திருத்த வேண்டும். ஆகவே தலைமுடியை மாத்திரம் அந்த விசேட தினத்தில் கலந்து கொள்வதற்காக வளர்த்தால் போதாது, தாடி, மீசையையும் வளர்க்க வேண்டும்.
தலைமுடி, தாடி, மீசை, Eyebrows போன்றவற்றை ஒரே தடவையில் திருத்துவதன் மூலமே ஆண்களின் முகத்தோற்றத்தை அழகாக்க முடியும்.
Recommended: ஆண்கள் ஹேர் ஸ்டைல் செய்யும் போது
Comments
Post a Comment