தற்காலத்தில் இளைஞர்கள் சிகரெட் புகைப்பதற்கு நிகராக துண்டு பீடியையும் விரும்பிப் புகைக்கிறார்கள். பீடியானது சிகரெட்டை விட அளவில் சின்னதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். சிகரெட்டை விட பீடியானது விலை குறைவாகும். ஆனால் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் பீடியும் சிகரெட்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை.
ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதற்கு மிக முக்கிய காரணமே அவர்கள் அந்த பழக்கத்தை தமது அன்றாட வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்வதாகும். உதாரணமாக: Tea குடிக்கும் போது சிகரெட் புகைப்பது, காலையில் Toilet போகும் போது சிகரெட் புகைப்பது, மேலும் பல.
இவ்வாறு அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையுடன் அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இணைப்பதால், அவர்கள் மறந்தாலும், அந்த இணைப்பு அவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்தி, அதனை அனுபவிக்கத் தூண்டுகிறது.
உதாரணமாக Tea குடிக்கும் போது சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு, Tea குடிக்கும் போதெல்லாம் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
ஒரு துண்டி பீடியை வைத்து சுகத்தை அனுபவிக்க முடியுமா? அதனை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ந்த போது, அவர்கள் பீடியை புகைக்கும் போது, உள்ளே இழுக்கும் புகையை மிகவும் குறைவாகவே வெளியில் விடுகிறார்கள். ஒரு சிலர் ஆண்கள் உள்ளே இழுக்கும் புகையை வெளியில் விடுவதே இல்லை. இந்த நிலையில் சீக்கிரம் போதை தலைக்கேறி விடுகிறது.
ஆனால் நுரையீரலினுள் சென்ற புகையானது, உள்ளேயே நீண்ட நேரம் இருப்பதால், நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருக்கும். சீக்கிரமே உங்களுக்கு சுவாச நோய்கள், சுவாசிப்பதில் பிரச்சனை, அல்லது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்குக் கூட அதிக வாய்ப்பு உருவாகும்.
ஒரு துண்டு பீடியில் Euphoria வை நீண்ட நேரம் அனுபவிக்க முயற்சிக்கும் ஆண்கள், பீடியைப் புகைத்துக் கொண்டே உடலைத் தடவிக் கொடுத்து, மெதுவாக, நிறுத்தி நிறுத்தி, நீண்ட நேரம் சுய இன்பம் செய்கிறார்கள். பிற்காலத்தில் இந்தப் பழக்கத்தினாலேயே அவர்களின் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பீடியை வாயில் வைத்தால் தான் ஆண்குறியே புடைத்தெழும் என்ற நிலை கூட உருவாகலாம்.
சிகரெட், அல்லது பீடி/சுருட்டு புகைக்கும் போது நிக்கோட்டினானது உங்கள் உடலால் சீக்கிரம் அகத்துறிஞ்சப்பட்டு, அதனை இரத்ததில் கலக்கச் செய்கிறது. இரத்தத்தில் கலந்த நிக்கோடினானது கிட்னிக்கு மேலே உள்ள அட்ரினலின்(அதிரினலின்/Epinephrine or Adrenaline) சுரப்பியை சென்றடைகின்றது. அதன் போது அட்ரினலின் சுரப்பியானது அட்ரினலினை சுரக்கிறது.
அதன் காரணமாக உங்கள் உடலில் Blood Pressure, Breathing, and Heart Rate போன்றவை அதிகரிக்கின்றது. அத்துடன் இரத்தத்தில் கலந்த நிக்கோடினானது மூளையையும் சென்றடைகிறது. அதன் போது மூளையின் Reward Circuit பகுதியில் ஏற்படும் திடீர் அட்ரினலின் அதிகரிப்பின் காரணமாக சிறிய, Euphoria(நன்னிலை உணர்வு) அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
Euphoria(யூபோரியா) என்பது உங்களால் அனுபவிக்கக் கூடிய அதிகூடிய மகிழ்ச்சி நிலை, அல்லது சுகமான நிலை. இதனை தான் போதையில் மிதக்கும் நிலை என்பர்.ஏனைய போதைப்பொருட்களைக் காட்டிலும் புகைப்பதன் மூலம் உருவாகும் Euphoria நிலைமை மிகவும் குறுகியதாகும். ஆண்கள் புகைக்கும் போது Nicotine ஆனது மூளையை தூண்டுவதனால், அதில் Dopamine சுரக்கிறது. Dopamine(டோபமைன்) என்பது மகிழ்ச்சியாக, அமைதியாக இருப்பதற்கான ஹோர்மோன் ஆகும். ஆகவே மூளையில் டோபமைன் சுரப்பதை Euphoria எனலாம்.
மன நோயாளிகளுக்கான மாத்திரை எடுத்துக் கொள்ளும் போதும், இயற்கையான மகிழ்ச்சியான நிகழ்வுகளை அனுபவிக்கும் போதும், விருதுகள், பரிசுகளை பெற்றுக் கொள்ளும் போதும் கூட Euphoria தோன்றலாம்.
Herbal Cigarettes ஆரோக்கியமானதா? Herbal Cigarettes களில் புகையிலையும் இருக்காது, நிக்கோடினும் இருக்காது. ஆனால் புகை இருக்கும் இல்லையா? “Smoking is Injurious to health” ஞாபகம் இருக்கட்டும்.
இன்று புகையிலை, பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில் மெல்லும் வகை புகையிலை, நுகரும் வகை புகையிலை, புகைக்கும் வகை புகையிலை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். வாயில் மெல்லும் வகை புகையிலையாக ஹன்ஸ், மாவா, வெற்றிலையுடன் புகையிலை ஆகியவற்றை குறிப்பிடலாம். மூக்கின் வழியாக நுகரக்கூடிய புகையிலையும் உள்ளது.
புகையின் மூலம் பாவிக்கப்படும் புகையிலைக்கு பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் அவை உயிர்க்கொல்லியே. புகையிலையில் 4ஆயிரம் வகையான நச்சு பொருட்கள் உள்ளன.
அவற்றில் 70விதமான புற்றுநோயை உருவாக்கும் முதல் தர காரணிகள் அடங்கியுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. புகையிலையினால் புற்றுநோய் மட்டுமின்றி மாரடைப்பு, சுவாச கோளாறுகள், பக்கவாதம், இருமல் போன்ற பலவித நோய்கள் ஏற்படுகின்றது.
நிக்கொட்டின் என்னும் போதைப்பொருள் புகையிலையில் அடங்கியுள்ளது. இதை ஒன்று அல்லது இருமுறை உபயோகித்து பார்த்தாலே போதைக்கு அடிமையாக்கிவிடும் தன்மைகொண்டது. சட்ட ரீதியாக கிடைக்கும் ஒரே ஒரு போதைப்பொருள் புகையிலை மட்டும் தான். பொதுவாக 13வயதில் தான் இதைப் பாவிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தல், தவறான முன்மாதிரி, இதன் தீய விளைவு அறியாமை என்பவற்றினால் இதை ஆரம்பிக்கிறார்கள். என்றாலும் இதன் பாவனையை விட்டு வெளிவர 55.4சதவீத மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் நிக்கொட்டின் ஏற்படுத்தும் அடிமைத்தனத்தால் அவர்களால் எளிதில் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட வேண்டும்.
குறிப்பாக மூச்சு பயிற்சி, அதிகம் தண்ணீர் பருகுதல், புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை திசை திருப்புதல் என்பன சுட்டிக்காட்டத் தக்கவையாகும். இந்த சுய உதவி ஆலோசனைகள் மூலம் புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர முயற்சிக்கலாம். இதுவும் உதவவில்லை என்றால் அது தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகி அடிமை தனத்திலிருந்து விடைபெறலாம்.
புகைப்பிடிக்கும் போது சிறிய அளவான நிக்கொட்டின் அவர்களின் மூளைக்கி ஊக்கியாக செயற்பட்டாலும் பெரிய அளவான நிக்கொட்டின் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இது நரம்பு செல்களுக்கிடையிலான சமிக்ஞைகளை தடுப்பதுடன் இதயத்தில், இரத்த நாளங்களில் மற்றும் ஹோர்மோன்களில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தில் உள்ள நிக்கொட்டின் புகைபிடிப்பவரை அமைதிபடுத்துவது போல் தோன்றினாலும் அது உள்ளுறுப்புகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Comments
Post a Comment