வேட்டி என்பது நமது பாரம்பரிய ஆடையாகும். அதனை கட்டத் தெரியாத பல ஆண்களுக்குக் கூட, அதை கட்டிப் பழக வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அவர்கள் YouTube வீடியோக்கள் பார்த்தோ அல்லது நண்பர்கள்/உறவினர்களின் உதவியுடனோ அதனை கட்ட பழகிக் கொள்வர்.
ஆனால் வேட்டி, லுங்கி கட்டும் போது இருக்கும் சில நுணுக்கமான விடையங்களை எல்லோராலும் சொல்லத்தர முடியாது. அவற்றை எமது இணையத்தளங்கள் மூலம் உங்களால் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் வேட்டி அணியும் போது முக்கியமான சில விடையங்களைக் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும், அவையாவன:
1. ஆண்கள் ஜட்டி அணிந்து வேட்டி கட்ட வேண்டும்.
2. எப்போதும் வேட்டியை அயன் செய்து அணிய வேண்டும்.
3. வேட்டியை முறையாகக் கட்ட வேண்டும்.
4. குதிக்கால் வரை ஆண்களின் வேட்டி நீளமாக இருக்க வேண்டும். அதாவது வேட்டியை அணிந்திருக்கும் போது, வேட்டி லேசாக தரையைப் பட்டும் படாமல் தொட வேண்டும்.
இது போன்ற வேட்டி அணிவது தொடர்பான பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
வேட்டியை எப்படி அயன் செய்வது?
Cotton Veshti - பருத்தி வேட்டியை துவைத்து காய வைக்க வேண்டும். வேட்டி 80 - 90% காய்ந்தவுடன், வேட்டியை எடுத்து அயன் செய்ய ஆரம்பிக்க வேண்டும். சாதாரணமாக சட்டையை அயன் செய்வது போன்ற வெப்ப நிலையில் காட்டன் வேட்டிகளை அயன் செய்யலாம்.
Polyester or Cotton Blend Veshti - பாலியெஸ்டர் வேட்டிகள் இலகுவில் கசங்காது. அதே நேரம் சீக்கிரம் காய்ந்து விடும். ஆனால் விரும்பினால் அவற்றை மெருதுவான வெப்ப நிலையில் அயன் செய்யலாம். நமது நாட்டின் வெப்ப நிலைக்கு பாலியெஸ்டர் வேட்டிகள் அணிவது உகந்தது அல்ல.
வெள்ளை நிறம் அல்லாத, வேறு நிற வேட்டிகளை அவசியம் அயன் செய்து அணிய வேண்டும் என்றில்லை. அதாவது, அன்றாடம் அணியும் வேட்டிகளை அவசியம் செய்ய செய்யத் தேவையில்லை
அவதானம்: பட்டு வேட்டியை பருத்தி வேட்டி போல துவைத்து காய வைக்க முடியாது. சாதாரணமாக நீரில் அலசி காய வைக்கலாம். சிலர் Shampoo போட்டும் துவைப்பர். ஆனால் அநேகமானவர்கள் Laundry க்குக் கொடுத்தே பட்டு வேட்டிகளை துவைத்து, அயன் செய்வர். தரமான, ஒரிஜினல் பட்டு வேட்டிகளின் விலை உயர்வாக இருக்கும். அவற்றை கண் மூடித்தமாக கையாண்டால், சீக்கிரம் பழுதடைந்து விடும்.
Silk Veshti - வேட்டியை அலசி காய வைத்த பின்னர். அளவான வெப்ப நிலையில் அயன் செய்ய வேண்டும். ஆனால் நேரடியாக அயன் செய்யக் கூடாது. அவ்வாறு அயன் செய்யும் போது பட்டு வேட்டி பொசுங்கி விட அதிக வாய்ப்புகள் உள்ளன. பட்டு வேட்டியை அயன் செய்யும் போது ஒரு வெள்ளை Paper யை வைத்து அதன் மேலே Iron Box யை வைத்து அயன் செய்வது உகந்தது.
Silk and Cotton Blend - பட்டு வேட்டிகள் போலவே பருத்தி மற்றும் பட்டு துணிகளின் கலப்பில் உருவான வேட்டிகளையும் கையாள வேண்டும்.
Read More: வேட்டியின் சால்வையை எப்படி அயன் செய்து அணிவது?
Keywords: ஆண்கள் பட்டு வேட்டியையும் காட்டன் வேட்டியையும் அயன் செய்வது எப்படி? பருத்தி வேட்டி, சில்க் வேட்டி, வேஷ்டி, பட்டு வேஷ்டி
Comments
Post a Comment