கழுத்தில் அணியும் Tie யை தமிழில் கழுத்து பட்டை, கழுத்து பட்டி என அழைப்பர். சில பள்ளிக் கூடங்களில் சிறுவயது முதலே கழுத்தில் Tie அணியப் பழக்குவர். இருப்பினும் இன்றும் பல இளைஞர்களுக்கு சுயமாக Tie அணியத் தெரியாது. அவர்கள் அநேகமாக Tie அணிய வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம் அவர்களின் நண்பர்களையே உதவிக்கு அழைப்பர்.
பல ஆண்கள் நினைப்பது போன்று கழுத்தில் Tie அணிவது ஒன்று கடினமான விடையம் அல்ல. ஆண்கள் கழுத்தில் Tie கட்டிக் கொள்வதில் பல முறைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. 2 - 3 வகையான Tie அணியும் முறைகளை YouTube வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டாலே போதும்.
Job Interviews, College Presentations, Office போன்றவற்றிற்கு பொதுவாக ஆண்கள் எவ்வாறான வகையில் Tie அணிந்து செல்லலாம்? பொதுவாக Tie கள் கட்டும் விதம், கழுத்தில் Tie கட்டப்படும் போது போடப்படும் முடிச்சை(Tie Knots) வைத்தே வேறுபடுகிறது.
நீங்கள் முயற்சித்துப் பார்க்க விரும்பும் Tie Knots களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தாலே போது, அவற்றை YouTube இல் தேடி, வீடியோ பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
Tips: ஆண்களின் Tie களில் பல வகை உள்ளது. Tie கள் மேலிருந்து கீழ் நோக்கி வரும் போது அகலம் கூடும். அந்த அகலம் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை அவதானித்து உங்களுக்குத் தேவையான Tie களை வாங்கவும். இளைஞர்கள் New Standard, Narrow, Skinny போன்ற Tie களை அவர்களின் உடல் பருமனை வைத்து தெரிவு செய்யலாம்.
Tips: ஆண்கள் தமக்கான Tie வாங்கும் போது Plain Color இல் எல்லா நிற சட்டைகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில் தெரிவு செய்வது உகந்தது.
Comments
Post a Comment