ஆண்களுக்கு என்ன தான் அறிவும், அழகும் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட தெரியாவிட்டால் அவை இரண்டும் இருந்தும் வீணாகும். அதில் உடல் மொழிகளின்(Body Language) பங்கு அதிகமாகும். அவை உங்களை பார்வையாளர்களுடன் தொடர்பில் இருக்கச் செய்யும். Body Language என்பது நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பேசும் போது செய்யும் விடையங்களாகும். அதன் மூலம் உங்கள் உணர்வுகளும், அணுகுமுறைகளும், குணமும், மனப்பான்மையும், தன்னம்பிக்கையும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும்.
ஆண்கள் தமது அழகினை தம்மை Grooming செய்து, Dressing Sense யை Improve செய்து மேம்படுத்தலாம். அதே போல நடை, பழக்கவழக்கம், ஒரு விஷயத்தை இன்னொருவருக்கு புரிய வைக்கும் திறன், ஒரு விஷயத்தை விளங்கப்படுத்தும் திறன் போன்றவற்றையும் Improve செய்து மேம்படுத்தலாம்.
ஆனால் இவற்றை ஆண்களால் சுயமாக செய்ய முடியாது. அதற்கு அவசியம் உதாரணங்கள் அவசியம். அவ்வாறான உதாரணங்களை நம்மால் சமூகவலைத்தளங்களிலும், நாம் வாழும் சமூகத்தில் இருந்தும் இனங்காணலாம். அவர்களைப் பின் தொடர்வதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் விரும்பினால் கைகளை Military Men போன்று பின்பக்கமும் கை கட்டிக் கொண்டு நிற்கலாம், அதாவது ஒரு கையால் இன்னொரு கையின் மணிக்கட்டை இறுக்கப் பிடித்துக் கொண்டு நிற்கலாம்.
முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். நம்மில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ள வேண்டும்.
சில மேடை நிகழ்சிகளும் நமக்கு அதற்கு உதவும். அவ்வாறான ஒரு Motivational Show தான் TED Talks Show ஆகும். இது போல பல நிகழச்சிகள் உள்ளன. இவ்வாறான் நிகழ்ச்சிகளில் இருந்து உங்களால் அவர்களின் அனுபவப்பாடங்களை மாத்திரம் அல்ல, அவர்களின் நடை, உடை, பாவனையைக் கூட நீங்கள் புதிதாக கற்றுக் கொண்டு அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றலாம்.
Facial Expressions(முகத்தில் காண்பிக்கப்படும் உணர்ச்சி வெளிப்பாடு), Body Movement and Posture(நடை, நிற்கும் விதம், உடல் அசைவுகள்), Gestures(பேசும் போது கைகளைப் பயன்படுத்துவது), Eye contact(பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது), Touch(தொடுகைகள், அரவணைப்பு, கட்டுத்தழுவுதல்), Space(மேடையில் நிற்பவர்களுக்கு இடையிலான இடைவெளி), Voice(குரலின் தன்மை, கம்பீரம்) இவற்றை இன்னொருவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவற்றை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்த நிறைய பயிற்சிகள் தேவை.
ஒரு மேடையில் உங்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட உங்களிடம் சிறந்த Grooming, Dressing Sense, Body Language and Presentation Skills தேவைப்படும். அதே நேரம் நீங்கள் பேசுவதில் சிறிது Friendliness, நகைச்சுவை கூட இருக்க வேண்டும். இல்லாவிட்டால், யாரும் நீங்கள் பேசுவதை கவனிக்க மாட்டார்கள்.
ஆண்கள் தம்மை கவர்ச்சியாக மேடைகளில் வெளிக்காட்டுவதற்காக, தமது Dressing Sense மேம்படுத்தும் போது, கொஞ்சம் முன்னாடியும்(Bulge) பின்னாடியும்(Butt) முட்டிக் கொண்டுருக்கும் வகையில் இறுக்கமாக இருப்பது நல்லது. அதன் மூலம் பார்வையாளர்களின் பார்வையானது எப்போதும் உங்கள் மீது மாத்திரமே இருக்கும்.
நடிகரும், தயாரிப்பாளருமான Ravi Dubey கலந்து கொண்ட TED Talks நிகழ்ச்சியில் அவர் தன்னை Present செய்து கொண்ட விதம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமையடைகிறோம்.
Comments
Post a Comment