ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் உடலில் ஆண்களின் ஹோர்மோனான Testosterone அதிகமாக உற்பத்தியாகும். ஆண்மையியக்குநீர் (Testosterone) அல்லது டெஸ்டெஸ்தரோன் ஆனது உடலில் அதிகமாக சுரக்கும் போது நமது உடலில் உள்ள தோலில் எண்ணெய் தன்மையை அதிகரிக்கும். அதன் காரணமாக நமது சருமத்தில் உள்ள மிகச்சிறிய துளைகள் அடைபட்டு, முகப்பருக்கள்/ஆக்னே(Acne) நிலைமை உருவாகும்.
அதே நேரம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனானது Keratin(கெரட்டின்) உற்பத்தியை தூண்டும். அதன் மூலம் நமது தோலில் உள்ள மயிர்க்கால்களில்(Hair Follicles) அடைபட வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக கூட பருக்கள் தோன்றலாம். கெரட்டின் ஒரு புரதமாகும். இது முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.
ஆண்கள் வயதுக்கு வரும் வயதில் இருந்து முகத்தையும் உடலையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் ஏற்படும் பருக்களை கண்மூடித்தனமாக கையாளக் கூடாது. அவற்றை அடிக்கடி அழுத்தி உடைக்க கூடாது. அதன் மூலம் அவை வடுக்களாக(Scars) மாறலாம். சிலருக்கு முகப்பருக்கள் உணவு ஒவ்வாமையால் கூட அதிகமாக ஏற்படலாம்.
பால் பொருட்கள், அதிகம் எண்ணெய் தன்மையுடள்ள உணவுகளை எடுப்பதை தவிர்ப்பதன் மூலமும், எந்த உணவுகளை உண்ணும் போது முகப்பரு அதிகரிக்கிறதோ அவற்றை தவிர்ப்பதன் மூலமும் உங்கள் முகத்தில் அதிகம் பருக்கள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
ஆண்கள் தாடி, மீசையை மழிக்கும் போது Shaving Against the Grain செய்யக் கூடாது. எப்போதும் முடி வளரும் திசையிலேயே தாடி, மீசையை Full Shave/Clean Shave செய்ய வேண்டும். அதன் மூலம் சீழ் வைத்த பருக்கள் ஏற்படுவதைக் குறைக்கலாம். முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் சவரம் பண்ணும் போது Ingrown Hair(மயிரானது மீண்டும் வளரும் போது தோலினுள் சுருண்டு வளர்தல்) உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அது கிட்டத்தட்ட சீழ் வைத்த பருக்களாக வெளித்தெரியும். Skin Irritation(தேமல், விஷப்பருக்கள்), Razor Burns ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Tips: முகத்தில் பருக்கள் ஏற்படும் ஆண்கள் Shave செய்வதை விட Trimmer பயன்படுத்தி Trim செய்வது உகந்தது.
இதனைத் தவிர ஒருவரின் ஆண்மைக்கும், அவர்களது முகத்தில் தோன்றும் பருக்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. முகப்பருக்கள் ஒரு பொதுவான சரும பிரச்சனையாகும். இது பால் நிலை(Gender) சார்ந்தது இல்லை. ஒரு ஆணின் ஆண்மைத் தன்மையை அவனின் தோற்றத்தை வைத்தோ அல்லது அவனது தோல் நிலைமையை வைத்தோ எடை போடுவது சரியானது அல்ல.
முகப்பருக்கள் ஹோர்மோன் மாற்றத்தால் மாத்திரம் அல்ல, சருமப் பிரச்சனைகள், ஒவ்வாமை, ஒருவர் சருமத்தை ஆரோக்கியமாக பேணும் முறை போன்றவற்றால் ஏற்படும். ஒருவனுக்கு ஏற்பட்டால் மாத்திரம் அவன் ஆம்பள ஆகிட முடியாது. ஆனால் ஆண்களுக்கும் முகப்பரு ஏற்படுவதற்கு பின்னால் மறைமுகமாக அவர்களின் ஆண் ஹோர்மோனும் உள்ளது என்பதும் உண்மை.
Keywords: Virile(ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க)
Comments
Post a Comment