ஆண்களுக்கு கறுப்பு நிறம் காவலாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதால், பொதுவாக ஆண்களின் ஆடைத் தெரிவில் அது அதிகம் செல்வாக்குச் செலுத்தும். ஆனால் ஆண்கள் கறுப்பு நிற ஆடைகளை வாங்கும் போது ஏற்கனவே உங்களிடம் உள்ள கருப்பு நிற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே உங்களிடம் உள்ள கறுப்பு நிற ஆடை பழுதடையாது இருக்கும் போது புதிதாக ஒரு கறுப்பு நிற ஆடையைத் தெரிவு செய்து வாங்குவது தேவையற்ற ஒன்றாகும்.
கருப்பு நிற ஆடைகளை துவைக்கும் போது அவை எளிதில் பழுதடைந்து விடும். கறுப்பு நிற ஆடைகள் வெளிறிப் போனால் அதனை அணிந்திருக்கும் போது பழைய ஆடைகளை அணிந்திருப்பது போன்று இருக்கும்.
ஆகவே கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் நிறம் சீக்கிரம் வெளிறிப் போகாத, தரமானவற்றை தெரிவு செய்யவும். இது கறுப்பு நிற ஆடைகளுக்கு மாத்திரம் இல்லை. ஏனைய நிற ஆடைகளுக்கும் பொருந்தும்.
கறுப்பு நிறமானது நமது சமூகத்தில் துக்கத்தின் நிறமாக பார்க்கப்படுவதனாலேயே, நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் அதனை நாம் அதிகம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை விரும்புவதில்லை.
அதே நேரம் கறுப்பு நிற பொருட்கள் சூரிய ஒளியை முழுமையாக உள்வாங்கி, அதனை வெப்பமாக மாற்றக் கூடியது. நமது நாட்டின் வெப்பமான கால நிலைக்கு அன்றாடம் கறுப்பு நிற ஆடைகள் அணிவது உகந்தது அல்ல.
Comments
Post a Comment