பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் இருந்த நட்பு வட்டமானது வயதாகும் போது பல்வேறு காரணங்களால் சிதைந்து போவதுண்டு. வெறுமனே பாடசாலை நண்பர்களை மாத்திரம் நம்பியிருக்கும் ஆண்கள் இறுதியில் மனம் விட்டு கதைத்துப் பேச யாரும் இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம்.
இதன் காரணமாகவே பூப்படையும் வயதில் இருந்து உங்கள் நட்பு வட்டத்தை முடிந்தவரை பெரிதாக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதன் மூலமே போறவன் போகட்டும், இருக்கிறவன் இருக்கட்டும் என்ற நிலையில் வாழ்க்கையை ஓட்ட முடியும்.
என்ன தான் பாடசாலை நண்பர்களுடன் சமூகவலைத்தளங்களில் வாழ் நாள் முழுதும் இணைந்து பயணித்தாலும்.
உங்களுக்கு தேவை இருக்கும் போது கூட அவர்களால் ஒரு Like, Share மட்டுமே பண்ணக் கூடியதாக இருக்கும். Online Friendship யை விட Real Time Friendship இக்குத் தான் நெருக்கம் அதிகமாக இருக்கும்.
நண்பர்களை எந்த வயதிலும் தேடிக்கொள்ளலாம், ஆனால் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்களை அவ்வளவு எளிதில் தேடிப்பிடிக்க முடியாது.
உங்க ஏரியாவில் உள்ள Playground, Gym, Swimming Pool பக்கம் போனால் அங்கு ஒரு Category யைச் சேர்ந்த நண்பர்களை தேடிக் கொள்ள முடியும். அதே போல Temple, Library, Movie Theaters என்று போனால் அங்கு ஒரு Category யைச் சேர்ந்த நண்பர்களை தேடிக் கொள்ள முடியும்.
ஆனால் அவர்களால் உங்களுடன் சேர்ந்து மாத்திரமே பயணிக்க முடியும். அவர்களால் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
Read More: ஆண்களுக்கு இடையிலான நட்பின் எல்லை எது? Bromance என்றால் என்ன?
Introvert எனப்படுபவர்கள் அதிகம் வெளியே செல்ல விரும்பாத, மற்றவர்களுடன் பேசிப்பழக விரும்பாத நபர்களாகும். Extroverts எனப்படுபவர்கள் அதிகம் வெளியே சுற்றுவதற்கு விரும்பும், பலரை சந்தித்து இலகுவாக பேசிப்பழக விரும்பும் நபர்களாகும்.
Facebook, Twitter(X), Instagram போன்றவற்றில் நீங்கள் சந்திக்கும் நபர்களை நேரில் சந்தித்துப் பேசிப் பழக முயற்சிக்கலாம். சமூகவலைத்தளங்கள் ஒருவரின் விருப்பு, வெறுப்பை மையமாக கொண்டு இயங்குவதனால், உங்களால் உங்களைப் போல விருப்பு, வெறுப்பை உடைய பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும். அவர்களை நேரில் சந்தித்து பழக ஆரம்பித்தாலே போதும்.
உங்களுக்கு, உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்களைத் தேடிக் கொள்ள வேண்டுமா? அவசியம் ஒரு Gay, Bisexual ஆண்யை நண்பனாக்கிக் கொள்ளுங்கள். தன்னினச்சேர்க்கையாளர்களை விட உங்களுக்கு வேறு எவராலும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு, முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
உறவினர்கள் அதிகம் இல்லாத, தனியாக வாழும் ஆண்களுடன் நட்புடன் பழகுங்கள். அவர்கள் கூட உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிக்கலாம்.
ஒருவருடன் பேசிப்பழகுவதன் மூலம் அவர்களின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்களை தேடும் போது, நீங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்து விடாதீர்கள்.
அடிக்கடி கூட்டாக ஒன்று சேர்ந்து பயணங்களையும், சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்வதன் மூலம் கூட புதிய நண்பர்களைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் நட்பையும் மேலும் வலுவாக்கலாம்.
Party பண்ணி, குடித்து கும்மாளமடிக்கும் ஆண்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். மது நாட்டுக்கும் அல்ல, உங்கள் Purse இற்கும் கேடு!
Comments
Post a Comment