குஸ்தி அல்லது பெலவானி எனப்படுவது இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு வகை மல்யுத்த கலையாகும். இந்த விளையாட்டில் ஒரு வீரர் ஒரு பயில்வான் (நாயகனுக்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் உஸ்தாத் (ஆசிரியர் என்பதற்கான பாரசீகச் சொல்) என்று குறிப்பிடப்படுகிறார்.
இந்த உலகில் உள்ள மனிதர்கள், உணவுகள், செயற்பாடுகள் என அனைத்தும் மூன்று குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அவையாவன சாத்வீக குணம், இராட்சத குணம், தாமச குணம்.
ஒரு தீவிரமான செயல்பாடாக, மல்யுத்தம் இயல்பாகவே இராட்சதத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குணத்தை சாத்வீக உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெலவானிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். பாலும், நெய்யும் உணவுகளில் மிகவும் சத்துவ குணம் மிக்கது என்று கருதப்படுகின்றன. மேலும் பாதாம் பருப்புடன் சேர்ந்து அவை மூன்றும் பெலவானி குராக் எனப்படும் உணவின் மூன்று புனிதங்களாக(Holy Trinity of the Pehlwani Khurak) இருக்கின்றன.
பெலவானிகளுக்கு ஒரு பொதுவான சிற்றுண்டி சுண்டல் ஆகும், அவை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறவைத்து உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சேர்த்து பதப்படுத்தப்படுகின்றன. முளை கட்டிய கொண்டைக் கடலையும் சத்தானதாக கருதப்படுகிறது. குஸ்தி விளையாட்டு வீரர்கள் ஆப்பிள், வில்வம், வாழைப்பழங்கள், அத்தி, மாதுளை, நெல்லிக்காய், எலுமிச்சை மற்றும் தர்ப்பூசணி, ஆரஞ்சு சாறு மற்றும் பச்சை காய்கறிகளை அவற்றின் சத்துவ தன்மைக்காக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் புரதச்சத்து அதிகம் இருப்பதால் பல பெலவானிகள் இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். மல்யுத்த வீரர்கள் சட்னி மற்றும் ஊறுகாய் மற்றும் சாட் போன்ற புளிப்பு மற்றும் அதிகப்படியான மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். பூண்டு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு லேசான சுவையூட்டுதல் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மதுபானம், புகையிலை, தாம்பூலம் நுகர்வு கடுமையாக தடுக்கப்படுகிறது.
பசங்களுக்கு ஆறு வயதாக இருக்கும் போதே பாரம்பரிய குஸ்தி/பெலவானி பயிற்சிப் பட்டறைகளில் அவர்களை சேர்க்கிறார்கள். அங்கு இருக்கும் ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் கடினமாக பயிற்சிகளை அவர்கள் எடுத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். அத்துடன் அவர்கள் அங்கு ஒழுக்கம், மல்யுத்த பயிற்சிகள் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள், Philosophy of Pehlwani(பெலவானி தத்துவங்கள்) போன்றவற்றை கற்றுக் கொள்கிறார்கள். 150 ஆண்டுகள் பழமையான இந்த பாடத்திட்டமானது இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
குஸ்தி/பெலவானி பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்களுக்கு இயல்பாகவே கட்டுமஸ்தான உடல் கிடைக்கப் பெற்றாலும், அவர்கள் 6 Packs/8 Packs Abs or Muscles like Bodybuilders யைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. அவர்களின் முக்கிய குறிக்கோள் உடல் வலிமையை அதிகரிப்பதாகும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் வலிமை மீது அதிக அக்கறை கொள்கிறார்கள். மாணவர்களின் உடல் வலிமையை அதிகரிக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள்.
குஸ்தி/பெலவானி பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்கள் கோவணம் போன்ற லங்கோட்(Langot) எனப்படும் Jockstrap போன்ற ஆடையை பயிற்சிகளின் போதும் போட்டிகளின் போதும் அணிவார்கள்.
Recommended: ஆண்கள் லங்கோட் அணிவது எப்படி?
அநேகமான குஸ்தி/பெலவானி பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்கள், பயிற்சிப் பட்டறைக்கு வந்த பின்னரே லங்கோட் அணிவார்கள். அவர்கள் லங்கோட் அணியும் போது ஆண்குறியையும், விதைகளையும் கீழ் நோக்கி இருக்கும் வகையில் வைத்து இறுக்கமாக அணிவார்கள்.
குஸ்தி வீரர்கள் பயிற்சியின் போது லங்கோட் மாத்திரம் அணிந்திருந்தாலும், விளையாட்டு போட்டிகளின் போது அநேகமாக அதன் மேல் V-Cut or Briefs ஜட்டி போன்றே ஒரு Shorts அணிவர்.
ஆசிரியர்களும், மாணவர்களும் வயது வித்தியாசம் இன்றி பழகுவார்கள். குஸ்தி/பெலவானி பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்து விடுவார்கள்.
அதே நேரம் எண்ணெய் குளியல் போட உடல் முழுவதும், சுட வைத்து ஆற வைத்த நல்லெண்ணெய்யை பூசவும் உதவுவார்கள்.
போட்டிகளின் போதும், போட்டி பயிற்சிகளின் போதும் Akhara(அகாரா) என அழைக்கப்படும் களிமண் தரையில் தான் இவர்கள் சண்டையிடுவார்கள். குஸ்தி விளையாட்டானது போட்டியாளர்களின் உடல் வலிமை, சகிப்புத்தன்மை, மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம், உத்தி(Techniques) போன்றவற்றை முன்னிறுத்துகிறது.
குஸ்தி/பெலவானி பயிற்சிகள், போட்டிகள் சகதியான இடங்களில், களிமண் தரைகளில் நடைபெறும். பயிற்சியின் முடிவில் ஆண்கள் லங்கோட் அணிந்து, உடம்பில் உள்ள சகதிகளை அகற்ற ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக குளிப்பார்கள்.
Comments
Post a Comment