பெண்களைப் போன்று அல்லாது, ஆண்கள் மாதம் ஒரு முறையாவது தலைமுடியை வெட்டி, சிகையலங்காரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் தோற்றமே மாறி விடும். அந்த அளவுக்கு Grooming என்பது ஆண்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
வயதாகும் போதும், இளவயதிலேயே முடி நரைக்கும் இளநரை பிரச்சனை(Premature Graying of Hair) உள்ள ஆண்களுக்கும் வெள்ளை முடியை தமக்கு விரும்பிய நிறத்திற்கு மாற்றுவதற்கு "ஹேர் டை" (Hair Dye) பயன்படுத்துவர்.
இளநரை பிரச்சனை உள்ள ஆண்கள் குறைந்தது 20-23 வயதிற்கு பின்னர், அல்லது நரை முடிகள் அதிகமாக வெளித்தெரிய ஆரம்பிக்கும் வயதில் தலைமுடிக்கும் ஹேர் கலரிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஹேர் டை செய்யும் ஆண்களுக்கு ஏதாவது விசேட தேவைகள் இருந்தாலே தவிர, மற்றும் படி அவர்களின் தலைமுடியை Short செய்யக் கூடாது. அளவாக வெட்ட வேண்டும். அதாவது Short செய்வதற்குப் பதிலாக தலை முடியின் அடர்த்தியை குறைத்து Shape செய்தாலே போதும்.
தலைமுடியை அதிகமாக Short செய்யும் ஆண்கள் மாதம் இரு முறையாவது ஹேர் கலரிங் செய்ய வேண்டி ஏற்படும். அதாவது, முடி வெட்டிய பின்னரும், முடி வெட்டி சில நாட்கள் சென்ற பின்னரும், வெள்ளை முடிகள் வெளித்தெரியும் அளவைப் பொறுத்து ஹேர் கலரிங்கைப் பாவிக்க வேண்டும்.
தலைமுடியை Shape செய்யும் ஆண்கள், ஒவ்வொரு முறை Shape செய்யும் போதும் ஹேர் கலரிங் செய்தால் போதுமானதாக இருக்கும்.
ஆண்கள் தலைமுடிக்கு மாத்திரம் அல்ல, அவர்களின் Facial Hair களான தாடி மீசை போன்றவற்றிற்கும் ஹேர் கலரிங்க செய்ய வேண்டும். ஆனால் தலைமுடிக்கு பயன்படுத்தும் Hair Dye யை தாடி, மீசை, புருவம் போன்றவற்றிகு பயன்படுத்தக் கூடாது. அவற்றிற்கு பிரத்தியேகமான ஹேர் கலர்கள் உள்ளன. அவை எதுவாக இருந்தாலும் Hair Dye யைப் பயன்படுத்தும் போது எப்போதும் அலர்ஜி பரிசோதனை செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
தாடி, மீசைக்கு ஹேர் கலரிங் செய்ய விரும்பாதவர்கள் அவற்றை Full Shave or Trim செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வர்.
குறிப்பு: தலைமுடிக்கு Hair Color/Dye அடித்து ஊறிய பின்னர், தலை முடியை கழுவும் போது, தலைமுடியில் இருந்து அகலும் Hair Color/Dye உங்கள் உடலில் படாது கழுவுவது நல்லது. அதன் மூலம் அலர்ஜிக்/ஒவ்வாமைகள் உங்கள் உடலில் தோன்றுவதை தவிர்க்கலாம்.
Recommended: ஆண்கள் ஹேர் ஸ்டைல் செய்யும் போது
Comments
Post a Comment