ஆண்கள் ஜட்டி வாங்கும் போது வெறுமனே உங்களின் இடுப்பு அளவை மாத்திரம் வைத்துக் கொண்டு ஜட்டி வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் உங்களுக்கான Perfect Fitting Underwear களை தெரிவு செய்து அணிய முடியாது போகும்.
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவுடன், தமது ஆண்குறியின் வகை, ஆண்குறியின் அளவு, குண்டிகளின் அளவு, தொடைகளின் அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் போது தான் அவர்களுக்கான Perfect Fitting Underwear யை அவர்களால் தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும்.
விறைப்படையாத நிலையில் ஆண்குறியின் அளவையும், ஆண்குறி விறைப்படையும் போது ஜட்டியினுள் தேவைப்படும் இடவசதியையும் சேர்த்து நீங்கள் தெரிவு செய்யும் உங்களுக்கான ஜட்டியில் முன் பக்கம் எவ்வளவு இடவசதி தேவை என்பதை முடிவு செய்யலாம்.
இவ்வாறான பல விடையங்களை கருத்தில் கொள்ளாமல் ஆண்கள் ஜட்டி வாங்கினால், அவற்றை நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது அவஸ்தைப்பட வேண்டி ஏற்படும்.
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது ஜட்டியின் நிறம்(Underwear Color) தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். எல்லா நிற ஜட்டிகளும் எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. ஒரு ஆண் ஜட்டியுடன் நிற்கும் போது அதைப் பார்ப்பவர்கள் கண்களுக்கு அவன் கவர்ச்சியாகத் தெரிய வேண்டும். அதை விடுத்து, அவன் அவர்களுக்கு ஒரு காமெடி பீஸாகத் தெரியக் கூடாது.
சில ஆண்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறங்களில் ஜட்டியைத் தெரிவு செய்வர். சிலர் அவர்கள் அணியும் சட்டையின் நிறத்தை ஒத்த, அல்லது Jeans, Pant இன் நிறத்தை ஒத்த அல்லது லுங்கி,சாரம், வேட்டியின் நிறத்தை ஒத்த நிறங்களில் அவர்களின் ஜட்டியைத் தெரிவு செய்வர்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறங்களில் ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் போது, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விலகினால், பார்ப்பவர்களுக்கு இவன் ஜட்டி போட்டிருக்கிறான இல்லையா என்ற சந்தேகம் ஏற்படும். அவன் மீது கவனம் அதிகமாக இருக்கும்.
அணியும் ஆடைகளின் நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால், ஆடை விலகினாலோ அல்லது Jeans, Pant Zip போடாவிட்டாலோ, உங்களைப் பார்ப்பவர்களுக்கு உங்கள் அந்தரங்கப் பகுதி மீது கவனம் அதிகமாக செல்லாது.
உங்களுக்குத் தெரியுமா? தற்காலத்தில் ஆண்களுக்கு அவர்களின் குண்டிகளை ஜட்டி அணியும் போது மறைக்க வேண்டுமா? இல்லையா? என்பதைக் கூட தீர்மானிக்க உதவும் வகையில் ஜட்டி அணிந்திருக்கும் போது ஆண்குறியையும் விதைப்பையையும் மறைத்து, குண்டிகளை மறைக்காத Thongs, Jockstrap, G-String Underwear போன்ற ஜட்டித் தெரிவுகளும் உள்ளன.
நீங்கள் அணியும் ஜட்டி எந்த Underwear Rise வகையை சார்ந்தது என்று தெரியுமா?
பொதுவாக ஆண்களின் ஜட்டிகள் Mid Rise ஆக இருக்கும். ஆனால் முன்பக்கம் இடவசதி குறைவாக தேவைப்படும் ஆண்கள், Low Rise Underwear களைத் தெரிவு செய்வதன் மூலம் ஜட்டி அணிந்திருக்கும் போது தமது தோற்றத்தை கவர்ச்சியாக வெளிக்காட்ட கூடியதாக இருக்கும்.
வளரும் வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையில் அவர்களின் ஆண்குறி மிகவும் சிறிதாக இருக்கும். புடைத்தெழும் போதே அது ஊதி பெரிதாகும். வளரும் வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு முன் பக்கம் அதிக இடவசதி தேவையில்லை.
ஆண்கள் தமது முன் பக்கத்தை மாத்திரம் கவனித்தால் பத்தாது, ஜட்டி வாங்கும் போது அவர்களின் பின் பக்கத்தையும் கவனிக்க வேண்டும்.
பெரிய உருண்டைக் குண்டிகள் உடைய ஆண்கள் Low Rise Underwear களைத் தெரிவு செய்து அணிந்தால் முன்னாடியும், பின்னாடியும் பிதுங்கிக் கொண்டு இறுக்கமாக இருக்கும். உங்களுக்கே ஜட்டியை எப்படா கழட்டி வீசுவோம் என்று இருக்கும்.
குண்டிப் பிளவுகள் விசாலமாக வெளித்தெரியும் ஆண்கள் அவற்றை மறைக்க விரும்பினால் அவர்கள் பெரிய/அகலமான Waistband உள்ள Mid Rise வகை Boxer Briefs or Trunk ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிய வேண்டும். அதன் மூலம் Butt Crack வெளித்தெரிவதை மறைக்க முடியும்.
Tips: ஆண்கள் நீளமான பனியனை ஜட்டியின் மீது அணிவதன் மூலம், அல்லது ஜட்டியினுள் பனியனை சொருகுவதன்(Tuck In) மூலம் அணிந்திருக்கும் ஆடைக்கு வெளியே குண்டிப் பிளவு(Butt Crack) எட்டிப் பார்ப்பதை தவிர்க்கலாம்.
ஆண்கள் Quality குறைவான Boxer Briefs, Trunks ஜட்டிகளை வாங்கி அணியும் போது சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது அந்த ஜட்டிகளின் கால்கள் உருளுவதும், தொடைகளில் அல்லது தொடை இடுக்குகளில் துணிக்கும் தோலுக்கும் இடையிலான உராய்வின் காரணமாக Chafing நிலைமை ஏற்படுவதும் ஆகும்.
Boxer Briefs ஜட்டி அணிந்திருக்கும் போது Boxer Briefs ஜட்டிகளின் கால்கள் உருளாத வகையில்(Anti - Roll Up) வடிவமைக்கப்பட்ட ஜட்டிகளும் தற்போது சந்தையில் விற்பனையாகிறது.
ஆனால் அவற்றை எவ்வளவு காலத்திற்கு எந்தப்பிரச்சனையும் இன்றி பயன்படுத்த முடியும் என்பது அந்த ஜட்டிகளின் இலாஸ்டிக் Quality யில் தங்கியுள்ளது.
Low Rise ஜட்டிகளில் மாத்திரமே Low Rise எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். Mid Rise என்பது Default Underwear Rise ஆகும். Low Rise Briefs களை சில ஜட்டி கம்பெனிகள் Micro Briefs என அழைப்பதும் உண்டு.
முன்பு High Rise ஜட்டிகளும் சந்தையில் இருந்தது, ஆனால் அது தேவைக்கு மேலதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைப்பதால், ஆண்கள் அவற்றை பெரிதும் விரும்பவில்லை. காலப் போக்கில் அதன் வரத்து சந்தையில் குறைந்து விட்டது.
தொடைகள் பெரிதாக, இறுக்கமாக இருந்தால், நல்ல இலாஸ்டிக் உள்ள ஜட்டிகளை ஆண்கள் தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஜட்டி போடும் போது தொடைகளுக்கு மேலே ஜட்டி ஏறாது போகலாம்.
அதே நேரம், நீங்கள் அதை கஷ்டப்பட்டு அணிந்தாலும், அதனால் உங்கள் கால்களுக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்கள் மறுத்துப் போகக் கூட வாய்ப்பு உள்ளது.
ஜட்டி இறுக்கமாக இருந்தால் உடலை அசைத்து அன்றாட வேலைகளை செய்யும் போது அசெளகரியமாக இருக்கும். அதே போல ஜட்டி மிகவும் தளர்வாக இருந்தால், எல்லாம் தொங்கும்.
அவ்வாறு இல்லாமல், ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டி தளர்வாக இருந்தால், ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான Support கிடைக்காது. ஜட்டியின் துணிகளும் அங்காங்கே சொருகிக் கொள்ளும்.
Recommended: ஜட்டி, பனியன் மற்றும் ஏனைய ஆண்கள் உள்ளாடைகள் தொடர்பில் வயது வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களை இங்கே அழுத்தி தெரிந்து கொள்ளவும்
Comments
Post a Comment