ஆண்களின் மானமானது அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதலால் அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அல்லது துண்டு அணிந்து பொது இடங்களில் குளிப்பதை சாதாரண விடையமாகவே இந்த சமூகம் பார்க்கிறது.
கூச்ச சுபாவம் உள்ள ஆண்கள் Briefs ஜட்டிகளை அணிந்து குளிப்பதற்குப் பதிலாக Boxer Briefs or Trunk வகை ஜட்டிகளை அணிந்து குளிப்பர். அவை பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டிய Shorts போன்று இருப்பதால், Shorts அணிந்து குளிப்பது போன்ற உணர்வே ஆண்களுக்கு ஏற்படும்.
நண்பர்களுடன் Boxer Briefs , Trunk ஜட்டி அணிந்து குளிக்கும் ஆண்கள்:
சில ஆண்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அணிந்திருக்கும் ஆடைகளுடனேயே பொது இடங்களில் குளிப்பர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அணிந்திருக்கும் ஆடைகளுடன் குளிக்கும் போது உடம்பு நன்றாக நனையாது. அதே நேரம் நனைந்த ஆடைகளின் நிறை அதிகரிக்கும்.
ஈரமான உடைகளை அணிந்திருக்க பாரமாக இருக்கும். அதே போல குளித்து முடிய, ஈரமான ஆடைகளைக் கழட்ட அதிகம் கஷ்டப்பட வேண்டி ஏற்படும்.
ஆண்கள் ஆறு, குளம், கடல், நீர் வீழ்ச்சி போன்ற பொது இடங்களில் குளிப்பதாக இருந்தால், அவை அவர்களின் வீட்டிற்கு அருகில் இருப்பதற்கான சாத்தியக் கூறு மிகக் குறைவாகும். ஆகவே அணிந்த ஆடைகளுடன் குளித்தால், அவற்றை பிழிந்து ஈரத்துடனேயே ஒரு பையில் போட்டு, நீங்கள் செல்லும் இடமெல்லாம் கொண்டு திரிய வேண்டி ஏற்படும்.
அதனைத் தவிர்ப்பதற்கு பொது இடங்களில் குளிக்கும் போது ஆண்கள் வெறும் ஜட்டியுடனும் துண்டுடனும் மாத்திரம் நின்று குளிக்கிறார்கள். ஆண்கள் இடுப்பில் கட்டி குளிப்பதற்கு என துண்டுகள் உள்ளன.
அவதானம்: உங்களுக்கு நிச்சல் தெரியாவிட்டால் கரையில் நின்று கூட குளிக்கலாம். ஆனால் நீச்சல் தெரியாமல் நீரோட்டம் உள்ள நீர் நிலைகளில் இறங்க வேண்டாம். அலைகள் அதிகமாக இருக்கும் போது கடலினுள் இறங்கியும் குளிக்க வேண்டாம்.
Recommended: வயது வந்த ஆண்கள் அவசியம் நீந்துவதற்கு(Basic Swimming) கற்றுக் கொள்ள வேண்டும்.
தற்காலத்தில் ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டினை உபயோகிப்பதை குறைத்து வருகிறார்கள். அதன் காரணமாக சந்தையில் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டுகளின் வரத்தும் குறைந்து விட்டது.
அதே நேரம் துண்டைக் கட்டிக் கொண்டு நீரோட்டம் உள்ள இடங்களில் குளிக்கும் போது துண்டு அவிழ அதிக வாய்ப்பு உள்ளது.
சில ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டாக பயன்படுத்துவர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது ஈரமானதும், உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும். அதிலும் நீங்கள் அணிந்திருப்பது வெள்ளை நிற துண்டு என்றால் அதனை அணியாமலேயே இருக்கலாம்.
சில ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் கட்டிக் குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்திருப்பர். இதற்கு பேசாமல் ஜட்டி மாத்திரம் அணிந்து குளித்து விடலாம், இல்லையா? ஏன் என்று கேட்டால், கன்னிப் பசங்க வெட்கப் பட்டுக் கொண்டு சிரிப்பார்கள்.
ஜட்டியில் ஆண்குறியும், விதைப்பையும் தங்கும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட துணி அடுக்குகள்(more than one layer of fabric to cover the front pouch) இருந்தால், ஆண்களால் வெள்ளை நிற ஜட்டி அணிந்து கூட தயங்காமல் குளிக்க முடியும்.
பொது இடங்களில் ஜட்டி அணிந்து குளிக்கும் ஆண்களுக்காகவே தற்போது நமது உள்ளூர் சந்தைகளிலும் Men Swimwear அறிமுகமாகியுள்ளது. அவற்றை அணிந்து குளிப்பதும் இலகு, அவற்றை காய வைப்பதும் இலகு.
Comments
Post a Comment