அயன் செய்வது ஆண்களைப் பொறுத்தவரையில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய விடையமாக இருந்தாலும், அயன் செய்த ஆடைகளை அணிந்திருக்கும் போது கிடைக்கும் மிடுக்கான, மரியாதையான தோற்றம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆடைகளை அயன் செய்வதற்கு பொறுமை தேவை. ஏன் என்றால், ஆடைகளை அயன் செய்வது ஒரு கலையாகும்.
ஆனால் இருக்கும் வேலைப்பளுவுடன் தினமும் ஆடைகளை அயன் செய்வது மிகவும் கடினமாக விடையமாக இருக்கும். அதன் காரணமாகவே நேரம் கிடைக்கும் போது, அல்லது வார இறுதி நாட்களில் பல நாட்களுக்குத் தேவையான ஆடைகளை துவைத்து, காய வைத்து, அயன் செய்து வைத்து விடுவார்கள்.
ஆனால் அயன் செய்த எல்லா ஆடைகளையும் உங்கள் இஷ்டம் போல மடித்து வைக்க முடியாது. உதாரணமாக Office Wear/Formal Dress, Traditional Dresses like Veshti(Cotton/Silk) களை எடுத்துக் கொண்டால், அவற்றை ஒழுங்காக அயன் செய்து மடித்து வைக்காவிட்டால், அவை கசங்கி விடும். பிறகு மீண்டும் அவற்றை அயன் செய்து கொண்டிருக்க வேண்டி ஏற்படும்.
T-Shirts, Jeans, Shorts, Lungi, Sweatpants, Sports Clothes, Gym Clothes போன்றவற்றை அவசியம் அயன் செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. கசங்கியிருந்தால் மாத்திரம் அயன் செய்யலாம், மற்றும் படி அவற்றை மடித்து வைத்தாலே போதும்.
Tips: ஆண்களுக்கு Hangers பயன்படுத்தும் பழக்கம் இருக்க வேண்டும். Hangers யைப் பயன்படுத்தி அடுத்த 2-3 நாட்களுக்கு அணியும் ஆடைகளை தயார் செய்து வைக்கலாம். ஏனைய ஆடைகளை அயன் செய்து மடித்து வைக்கலாம். அணியும் போது மாத்திரம் லேசாக, மடிப்புக்களை நீக்க அயன் செய்தால் போதும்.
Tips: கை வைத்த பனியனைத் தவிர, ஏனைய ஜட்டி, பனியன்களை அயன் செய்யத் தேவை இல்லை. அவற்றை ஒழுங்காக மடித்து வைத்தாலே போதும்.
அயன் செய்த ஆண்களின் ஆடைகளை மடிப்பது எப்படி என்பது தொடர்பாக பல வீடியோக்கள் YouTube இல் உள்ளது. அவற்றை பார்வையிடுவதன் மூலம் இவற்றைத் தவிர மேலும் பல வழிகளை கற்றுக் கொள்ள முடியும்.
Comments
Post a Comment