அரபி நாடுகளில் வசிக்கும் ஆண்களும், இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் ஆண்களும் அணியும் தலைப்பாகையை Shemagh என்பர். இது அவர்களது பாரம்பரிய தலைப்பாகையாகும்.
இது அவர்களை மேலும் அழகாக்குவது மாத்திரமல்லாது, தேவை ஏற்படின் கால நிலை மாற்றத்தில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும், மணல் புயல், தூசி போன்றவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.
அரபிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பல்வேறு முறையில் இந்தத் தலைப்பாகையை அணிவர். ஒரு சிலர் உள்ளே குல்லா அணிந்தும் இந்த தலைப்பாகையை அணிவது உண்டு.
குல்லா(Skullcap/Taqiyah) எனப்படுவது முஸ்லிம் ஆண்கள் அணியும், அவர்களின் மத அடையாளமாகப் பார்க்கப்படும் தொப்பி ஆகும்.
Keywords: Keffiyeh Arab Head Scarf, Dubai Style Head Scarf, Black Headbands, Sheikh Muslim Turban Saudi Dubai Head wear, Shemagh Scarf, Prayer Cap, Taqiyah, Kufi, Mens Cap
Comments
Post a Comment