நமது நாட்டின் கால நிலைக்கு ஆண்கள் லுங்கி/சாரம் கட்டிக் கொண்டு தூங்குவது மிகவும் ஆரோக்கியமானதாகும். உங்களுக்கென்று தனி அறை இருந்தால், லுங்கி அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி போடாமல் லுங்கி கட்டிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தால், அல்லது உங்களுக்கு என்று ஒரு தனி அறை இல்லாவிட்டால், அவசியம் ஜட்டி அணிந்தே லுங்கி/சாரம் அணிந்து ஆண்கள் தூங்க வேண்டும்.
லுங்கி, சாரம், வேட்டிக் கட்டிக் கொண்டு தூங்கும் ஆண்கள் விரும்பினால் மேலாடை இன்றியும் தூங்கலாம், அல்லது பனியன் மாத்திரம் அணியலாம். ஆண்கள் லுங்கி/சாரம் கட்டியிருக்கும் போது T-Shirt/Shirt போன்ற மேலாடைகளை அணிந்து தூங்குவது குறைவாகும்.
வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி கட்டிக் கொண்டு தூங்கும் போது உள்ளே ஜட்டி போடனும்?
ஆண்கள் தூங்கும் போது அவர்களின் உடலில் Testosterone ஹோர்மோன் அளவு அதிகமாக இருக்கும். உடலில் ஏற்படும் இந்த ஹோர்மோன் மாற்றத்தால் உங்கள் உடலுக்கு, மூளையினால் ஆண்குறிக்கு இரத்தத்தை அனுப்புமாறு செய்தி அனுப்பப்படும்.
அதன் காரணமாக எந்தவொரு காரணமும் இல்லாமல் ஆண்குறி பாதியளவில் அல்லது முழுமையாக புடைத்தெழும். அப்போது நீங்கள் உங்கள் உடலில் காமத்தீயை எரிய விட்டால், அல்லது குப்புறப்படுத்து லேசாக புடைத்தெழுந்த ஆண்குறியை படுக்கையுடன் சேர்த்து அழுத்தினால், ஆண்குறி முழுமையாக புடைத்தெழுந்து விடும்.
சில ஆண்களுக்கு தூங்கும் போது உடலில் எற்படும் அசைவுகளினாலும் ஆண்குறி தூண்டப்பட்டு, ஆண்குறி புடைத்தெழுவதுண்டு. பூப்படையும் வயதில் ஆண்களுக்கு இயல்பாகவே எழுந்தமான ஆண்குறி எழுச்சி ஏற்படும்(Mic Testing 1.. 2.. 3..).
ஜட்டி போடாமல் லுங்கி மாத்திரம் கட்டிக் கொண்டு தனி அறையில் படுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் மற்றவர்களால் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் மூன்றாவது காலை பார்க்கக் கூடியதாக இருந்தால் ஒரே அசிங்கமாக போயிடும்.
சில ஆண்களுக்கு என்னதான் இறுக்கமாக கட்டினாலும், தூங்கும் போது லுங்கி, இடுப்பில் நிற்காது, லுங்கியின் கட்டு கழன்று விடும்.
நீங்கள் தூங்கும் போது லுங்கி அவிழ்ந்தாலு, நீங்களே உள்ளே ஜட்டி அணிந்து லுங்கி கட்டியிருந்தால், ஜட்டி உங்கள் மானத்தைக் காப்பாற்றும். ஆகவே லுங்கி கட்டிக் கொண்டு தூங்கும் போது அவசியம் வயது வந்த ஆண்கள் ஜட்டி போட வேண்டும்.
அதே நேரம், லுங்கி கட்டும் ஆண்கள், அவர்களது இடுப்பில் அரைஞாண் கயிறு(அருணாக்கொடி) கட்ட வேண்டும். அதன் மூலம், அதனை லுங்கியின் கட்டின் மேல் விட்டு, லுங்கியின் கட்டை இறுக்கமாக்கலாம்.
அதன் மூலம் நீங்கள் தூங்கிக் கொண்டி இருக்கும் போது உங்கள் உடல் அசைவுகளின் காரணமாக, உங்களை அறியாமல் லுங்கியின் கட்டு அவிழ்வதை தவிர்க்கலாம்.
Keywords: லுங்கி கட்டிக்கொண்டு தூங்கும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சாரம் கட்டிக் கொண்டு தூங்கும் ஆண்கள்
Comments
Post a Comment